"வேற லெவல்... மடி மீது நாய்க்குட்டி.." - கவர்ச்சி உடையில் லக்ஷ்மி மேனன் - ஏங்கும் ரசிகர்கள்..!


கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். 
 
பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர். 
 
சினிமாவில் அறிமுகமான புதிதில் நடித்த நான்கு படங்களுமே ஹிட் அடித்த காரணத்தால் லக்கி நடிகை என்று பெயரெடுத்துள்ளார் லட்சுமி மேனன். தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாவே வருவதால் குடும்ப குத்துவிளக்கு தோற்றத்திலிருந்து கவர்ச்சியான தோற்றத்துக்கு மாற முடிவு செய்து விட்டாராம். 
 
 
இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறராம் லட்சுமி மேனன். கும்கி, பாண்டியநாடு, சுந்தரபாண்டியன் படங்களில் குடும்ப குத்துவிளக்காக சேலைகட்டி நடித்த லட்சுமி மேனன் ஹோம்லி நடிகை என பெயர் பெற்றார். 
 
குடும்ப பெண் போல் இருப்பதால்தானே அதே பாணியில் படங்கள் வருகிறது. எனவே தோற்றத்தை மாடர்னாக மாற்றிக்கொண்டால் வேறு கதைகளில் நடிக்கலாமே என்று தோழிகள் ஐடியா கொடுத்துள்ளனர். இதனைதொடர்ந்து உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார் அம்மணி. 
 
சமீபத்தில், முத்தையா இயக்கத்தில் மீண்டும் விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர்ந்தார். புலிக்குத்திபாண்டி படத்தில் ஒரு எமோஷனல் கதாபாத்திரத்தை அவர் ஏற்று நடித்திருந்தார். இத்தகைய சூழலில், நீண்ட நாட்களுக்கு பின்னர் நடிகை லட்சுமிமேனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அப்டேட் கொடுத்து வருகின்றார். 
 

அந்த வகையில் தற்போது வெஸ்டர்ன் கவுனில் ஸ்பெக்ஸ் அணிந்தப்படி ஹேண்ட் பேக்கை மாட்டிக்கொண்டு கெத்தாய் போஸ் கொடுத்துள்ளார் லக்ஷ்மி மேனன். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் என வர்ணித்துள்ளனர்.

"வேற லெவல்... மடி மீது நாய்க்குட்டி.." - கவர்ச்சி உடையில் லக்ஷ்மி மேனன் - ஏங்கும் ரசிகர்கள்..! "வேற லெவல்... மடி மீது நாய்க்குட்டி.." - கவர்ச்சி உடையில் லக்ஷ்மி மேனன் - ஏங்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 11, 2021 Rating: 5
Powered by Blogger.