உடம்பில் பொட்டு துணி இல்லாமல் அனுப்பமா பரமேஸ்வரன்..! - ஷாக் ஆன ரசிகர்கள் - அனுப்பமா பதில் இதுதான்..!


தெலுங்கு மற்றும் மலையாள படங்கள் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த 2016ம் ஆண்டு தமிழில் வெளியான கொடி படத்தின் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஹேக் செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அவர் கூறினார். இது குறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் "சில முட்டாள்கள் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்". 
 
வழக்கமாகப் பாரம்பரிய உடைகளில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிடும் அனுபமா, நேற்று தன்னுடைய மார்பிங் போட்டோ செய்யப்பட்டுள்ளதைக் கண்டார். 
 
மேலும் அந்த படத்திற்குக் கீழ் 'Swipe Up' என்று எழுதப்பட்டிருந்தது. அந்த லிங்க்கிற்குள் சென்றால் அனுபமாவின் எடிட் செய்யப்பட்ட மோசமான புகைப்படங்கள் இருந்துள்ளது.
 

இதனை பார்த்த ரசிகர்கள், அனுபமாவின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து அனுப்பமமாவிற்கு தெரியப்படுத்தினார்கள். இதனை கண்ட அனுபமா, இது போன்று எடிட் செய்யப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு, அவ்வாறு செய்தவர்களைக் கடுமையாகச் சாடினார். 
 
மேலும், இது குறித்து பதிலளித்துள்ள அனுப்பமா, இப்படிப்பட்ட கேவலமான விஷயத்தைச் செய்வதற்காக நேரத்தைச் செலவிட்டவர்களே, உங்கள் வீட்டில் அம்மா மற்றும் சகோதரிகள் யாரும் இல்லையா..? என்று காட்டமாகக் கூறியுள்ளார்
 
மேலும் உங்களுடைய நேரத்தை இது போன்ற முட்டாள்தனத்தில் செலவிடாமல் உபயோகம் உள்ளதாகச் செலவிடுங்கள் என்றும் கூறியுள்ளார். மலையாளத்தில் 2015ம் ஆண்டு நிவின் பாலி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில், மேரி ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனுபமா திரையுலகில் அறிமுகமானார். 
 
கடந்த ஆண்டு நடிகர் புனித்குமாருடன் 'நடசர்வபோமா' என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவர் கன்னடத்தில் அறிமுகமானார். அதே போல தமிழில் வெளியான ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் சதமானம் பாவாடி, தேஜ் ஐ லவ் யு, ஜோமோன்டி, கொடி போன்ற பல படங்களில் அவர் நடித்துள்ளார்என்பது குறிப்பிடதக்கது.

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் அனுப்பமா பரமேஸ்வரன்..! - ஷாக் ஆன ரசிகர்கள் - அனுப்பமா பதில் இதுதான்..! உடம்பில் பொட்டு துணி இல்லாமல் அனுப்பமா பரமேஸ்வரன்..! - ஷாக் ஆன ரசிகர்கள் - அனுப்பமா பதில் இதுதான்..! Reviewed by Tamizhakam on March 20, 2021 Rating: 5
Powered by Blogger.