அன்று முதல் இன்று வரை இளமை மாறாமல், அப்போ பாத்த மாதிரியே இப்பயும் இருக்கிங்க எப்படி மேடம் என நடிகை நதியாவிடம் கேட்காத ஆளில்லை.
அந்த அளவுக்கு என்றும் இளமையுடன் திரையுலகில் உலா வரும் நடிகை நதியா, கவர்ச்சி இல்லாத நடிப்பின் மூலம் தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இன்றுவரை திரையுலகில் வெற்றி வலம் வருகிறார்.
இந்நிலையில் நதியா மற்றும் நடிகர் சுரேஷ் ஒன்றிணைந்து பல திரைப்படங்களில் நடித்த நிலையில் அனைத்தும் மிகப் பிரபலமாக பேசப்பட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் மிதந்தது.
இந்நிலையில் நதியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்முறையாக வெளியிட்ட அவரது மகள்கள் இருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வருகிறது.
80'ஸ் இளைஞர்களின் இதயத்தில் கனவு கன்னியாகவும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை நதியா. அன்றும் முதல் இன்று வரை அதே பளபளக்கும் இளமையுடன் வலம் வருகிறார்.
1985ம் ஆண்டு வெளியான “பூவே பூச்சூடவா” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நதியா, உயிரே உனக்காக , நிலவே மலரே, ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வலம் வந்தார்.
மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக புகழ் பெற்றவர். மற்ற நடிகைகளை விட வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
1988ம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன நதியா, சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். நதியா - சிரீஸ் தம்பதிக்கு சனம், ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவருடைய மகள்களில் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்ன இவங்க ரெண்டு பேரும் நதியாவின் பொண்ணுங்களா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.





