90'ஸ் கவர்ச்சி குதிரை சங்கவியா இது..? - நம்பவே முடியலையே..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
90களில் இளைஞர்களின் ஃபேவரிட் நடிகை என்றால் அது சங்கவி தான், இவர் தமிழ் சினிமாவில் 1993 ஆம் ஆண்டு அஜித்தின் அமரவதி திரைப்படத்தில் அறிமுகமானார். 
 
இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்த திரைப்படமே விஜய்யுடன் ரசிகன், மேலும் விஜயுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் கவர்ச்சி கலந்த கலவை நாயகியாக நடித்து வந்தவர் இதுவரை இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றில் 90 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார், அப்பொழுது சிறந்து விளங்கிய சரத்குமார், பிரபு, விஜய், அஜித், ராம்கி, பிரசாந்த் விஜயகாந்த், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன், கமலஹாசன், ரஜினிகாந்த் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.
 
 
நடிகை சங்கவியுடன் நடித்த நடிகைகள் எல்லோரும் திருமணம் ஆகி செட்டிலாகிவிட, சங்கவி மட்டும் பல வருடங்களாகத் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். 
 
இதுபற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோதெல்லாம், வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், விரைவில் என் திருமணம் நடக்கும் என்றே தெரிவித்து வந்தார்.இந்நிலையில், தனது 38 வது வயதில் கடந்த 2016 ஆம் ஆண்டு, பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 
 
 
திருமணத்துக்குப் பிறகு அதிகப் படங்களில் நடிக்காத சங்கவி, ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பெங்களூரில் கணவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் தனது 42 வது வயதில் அவர் தனது முதல் குழந்தையைப் பெற்றுள்ளார். 
 
அவருக்கு அழகான பெண் குழந்தைப் பிறந்துள்ளது. குழந்தையின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சங்கவி, எனது அழகான தேவதை என்று குறிப்பிட்டுள்ளார். 

 
இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

90'ஸ் கவர்ச்சி குதிரை சங்கவியா இது..? - நம்பவே முடியலையே..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! 90'ஸ் கவர்ச்சி குதிரை சங்கவியா இது..? - நம்பவே முடியலையே..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 14, 2021 Rating: 5
Powered by Blogger.