"இது பொண்ணா.. இல்ல.. பரோட்டா மாவா..?.." - தோல் நிறத்தில் மேலாடை - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நஸ்ரியா..!


தமிழில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்னமும் தமிழ் ரசிகர்களின் கனவு தேவதையாக வளம் வருபவர் நஸ்ரியா நசீம். சினிமாவில் அவருக்கான மிகப்பெரிய இடம் காத்திருந்த போதும், பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். 
 
இந்நிலையில் மீண்டும் சினிமாவில் பிரதேசிக்க காத்திருக்கும் நஸ்ரியா, தன்னுடைய முதல் தெலுங்கு திரைப்படம் பற்றிய அறிவிப்பை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
 
2006 ஆம் ஆண்டு வெளியான பளிங்கு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்த நஸ்ரியா தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். 
 
தமிழில் இவர் நடிப்பில் வெளியான ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. தமிழில் கடைசியாக திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்திருந்தார். 
 
அதனை தொடர்ந்து நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பின்னர் திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து கூடே என்ற திரைப்படத்தில் பிரித்விராஜ், பார்வதியுடன் இணைந்து நடித்தார் நஸ்ரியா. 
 
 
2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களுடன் டச்சிலே இருந்தார்.
 
இந்நிலையில் விவேக் ஆத்ரேயா இயக்கும் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நஸ்ரியா. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனது கணவருடன் ஐதராபாத் பறந்துள்ளார் நஸ்ரியா. ஆன்டி சுந்தரினிகி என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்கிறார். 
 
 
இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். நஸ்ரியா நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கமிட் ஆனதை பற்றி நஸ்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'இன்று என்னுடைய முதல் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். 
 
முதலாவது என்பது எப்போதும் ஸ்பெஷல். அதனால் ஆன்டி சுந்தரினிகி படமும் எனக்கு ஸ்பெஷல்' என குறிப்பிட்டுள்ளார். நஸ்ரியாவின் தெலுங்கு திரைப்படம் பற்றிய அறிவிப்பிற்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


அதனுடன், தோல் நிறத்தில் மேலாடை அணித்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள, இது பொண்ணா..? இல்ல, பரோட்டா மாவா..? என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"இது பொண்ணா.. இல்ல.. பரோட்டா மாவா..?.." - தோல் நிறத்தில் மேலாடை - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நஸ்ரியா..! "இது பொண்ணா.. இல்ல.. பரோட்டா மாவா..?.." - தோல் நிறத்தில் மேலாடை - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நஸ்ரியா..! Reviewed by Tamizhakam on April 22, 2021 Rating: 5
Powered by Blogger.