மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் அபர்ணா பாலமுரளி சமீபத்தில் சூர்யாவுடன் சூரரைப்போற்று படத்தில் நடித்திருந்தார். சூரரைப் போற்று படத்தின் மூலம் ஆஸ்கார் விருது வரை தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் ப்ராமிசிங் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக அவர் எடுக்கும் திரைப்படங்கள் அனைத்துமே அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.
அந்த வகையில் இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு சூரரைப்போற்று படத்தை இயக்கியிருந்தார். தற்போது சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் ரேஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ஜி ஆர் கோபி நாத் என்பவரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாக வைத்து உருவான அந்த படம் சக்கை போடு போட்டது. ஆனால் ரசிகர்களுக்கு ஒரே ஒரு குறைதான்.
தியேட்டரில் கொண்டாட வேண்டிய படத்தை அநியாயமாக அமேசான் தளத்தில் தூக்கி கொடுத்து விட்டார்களே என்பதுதான். அமேசான் தளத்தில் வெளியிட்டதும் நல்லதுதான் என்கிறார்கள்.தியேட்டரில் வெளியிட்டால் தென் இந்தியாவில் மட்டுமே பிரபலமாகும்.
ஆனால் அமேசான் தளத்தில் வெளியிட்டதால் நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் சூரரைப்போற்று திரைப்படம் பாய்ந்து அனைவரையும் கவர்ந்துவிட்டது.அந்த படத்தில் நாயகியாக நடித்திருந்த அபர்ணா பாலமுரளி கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். லெக்கின்ஸ், புடவை என வித்தியாசமான காம்பினேஷனில் ஒரு உடையை உடுத்திக்கொண்டு தளுக் மொளுக் என இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி காம்பினேஷன் இது..? இருந்தாலும், நல்லா தான் இருக்கு..! என்று கூறி வருகிறார்கள்.
Tags
Aparna Balamurali