சின்ன குழந்தையாக இருந்த தாடி பாலாஜியின் மகளா இது.! - ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மடமடவென வளர்ந்த போஷிகா..!


தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் சிறிய காமெடி கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் நிரந்தர இடம் பிடித்தவர் தாடி பாலாஜி. அதன் பின்னர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். 
 
இவர் நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாலாஜி நித்யா தம்பதியினருக்கு போஷிகா என்ற ஒரு மகள் உள்ளார். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். 
 
நித்யாவுடன் மகள் போஷிகா வாழ்ந்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2-வில் தாடி பாலாஜி-நித்யாவும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க பல முயற்சிகள் செய்தும் அவர்களை சேர்த்து வைக்க முடியவில்லை தற்போது இவர்கள் இருவருமே தனித்தனியாக தான் வசித்து வருகின்றனர்.
 
பிரபல நடிகர் தாடி பாலாஜி தனது மகளுக்கு எந்த விதத்திலும் உதவாத நிலையில் அவர் மனைவி நித்யா பழையபடி வேலைக்குப் போகலாம்னு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. 
 
இவர்கள் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனமாடிய போதுதான் இவர்களுக்கிடையில் இருந்த குடும்பப் பிரச்னை வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. தொடர்ந்து பொலிஸ் புகார், நீதிமன்றம் என இவர்களது வீட்டு விவகாரம் பொதுவெளிக்கு வந்ததைத் தொடர்ந்து கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். 
 
இந்த நிலையில், `பிக் பாஸ்’ இரண்டாவது சீசனில் இருவருமே போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல, பழையபடி இவர்களின் குடும்ப விவகாரம் மீடியாவில் அடிபட்டது. அந்த சீசனின் இறுதியில் கமல்ஹாசன் 
 
முன்னிலையில் இருவரும் மனம்மாறி சேர்ந்துவிட்டதாகக் காட்டப்பட்டது. ஆனால், இன்றுவரை பாலாஜி தனியாகவும் நித்யா தன் மகள் போஷிகாவுடன் தனியாகவும்தான் வாழ்ந்து வருகிறார்கள். பாலாஜியைப் பிரிந்ததிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார் நித்யா. 
 
 
கொரோனாவால், இப்போது பள்ளியைத் திறக்கமுடியாததால், பள்ளியைத் தொடர்ந்து நடத்த இயலாத சூழலில் இருக்கிறாராம். ஐ.டி துறையில் பெரிய கம்பெனியிலும் பிறகு பிரபலமான ஒரு மருத்துவமனையில் ஹெச்.ஆர் அதிகாரியா இருந்தவர் நித்யா. பாலாஜியைக் கல்யாணம் செய்த பிறகு அந்த வேலையிலிருந்து விலகிட்டார். 
 
குடும்ப வாழ்க்கையில பிரச்னை வந்து கணவரைப் பிரிந்து இருந்தாலும், சொந்தக் காலில் நிற்கணும்னு நினைக்கிறாங்க. அவங்க வழக்கு எப்ப எப்படி முடியும்னு தெரியல. முடிஞ்சாலும் ஜீவனாம்சமா பெருசா எதுவும் கிடைக்குமான்னும் தெரியல. 
 
 
ஏன்னா மகள் போஷிகாவுக்குச் செய்யச் சொன்ன சில விடயங்களையே பாலாஜி செய்யலைன்னு சொல்லிட்டிருந்தாங்க. அதனால் பழைய வேலைக்கே செல்ல நித்யா தைரியமாக முடிவெடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதாவது புகைப்படங்களை வெளியிடும் நித்யா தற்போது தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நித்யாவும் தனது மகள் போஷிகாவும் ஒரே மாதிரி ஆடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். 


 
இதனால் ரசிகர்கள் தாடி பாலாஜியின் மகள் அதற்குள் வளர்ந்து விட்டதாக ஆச்சரியப்படுகின்றனர்.

சின்ன குழந்தையாக இருந்த தாடி பாலாஜியின் மகளா இது.! - ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மடமடவென வளர்ந்த போஷிகா..! சின்ன குழந்தையாக இருந்த தாடி பாலாஜியின் மகளா இது.! - ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மடமடவென வளர்ந்த போஷிகா..! Reviewed by Tamizhakam on April 05, 2021 Rating: 5
Powered by Blogger.