விஜயுடன் நடனம் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - ரகசியம் உடைத்த பிரபல நடிகை..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் தான் நடனமாடும்போது கர்ப்பமாக இருந்ததாக பிரபல நடிகை கூறியுள்ள விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
இவரது இயற்பெயர் ஸ்வேதா கோனுர் மேனன். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் அஜித்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார். 
 
2002-2003 இல் இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெற்றியளிக்காததால் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கச் சென்றார். 2004 ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். 
 
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கமலுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் சீ யூ எட் 9 திரைப்படத்திலும் நடித்தார். இவர் ரோஜா வனம், வெற்றிக் கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டு பயலே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், தனது தமிழ் சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அப்போது விஜய்யுடன் குருவி படத்தில் 'டண்டானா டர்னா' பாடலில் நடனம் ஆடிய தருணத்தைப் பகிர்ந்துக் கொண்டார். 
 
விஜய்யுடன் டான்ஸ் ஆட கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்றிருந்தேன். ஆனால் அப்போது நான் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததால், நன்றாக நடனம் ஆட முடியாமல் போனதில் வருத்தமுண்டு. 
 
அந்த பாடலில் எளிதாக உடலை அசைப்பது போன்ற ஸ்டெப் தான் இருக்கும். அது எனது கடைசிப் படமும் கூட. ஒரு வேளை கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால், மனதில் பதியும்படி, சிறந்த நடனத்தை கொடுத்திருப்பேன் என்றார் மாளவிகா.

விஜயுடன் நடனம் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - ரகசியம் உடைத்த பிரபல நடிகை..! விஜயுடன் நடனம் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் - ரகசியம் உடைத்த பிரபல நடிகை..! Reviewed by Tamizhakam on May 11, 2021 Rating: 5
Powered by Blogger.