பிரபல நடிகரின் மகனுடன் நெருக்கமாக சுற்றும் பிக்பாஸ் ஜூலி..! - வைரலாகும் புகைப்படம்..!


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிக் பாஸ் ஜூலி சமீபகாலமாக பிரபல நடிகரின் மகனுடன் ஊர்சுற்றி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 
 
ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய மானம் மரியாதையைக் கெடுத்துக் கொண்டார் என தினமும் சமூகவலைதளத்தில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருவதைப் பார்க்கிறோம். 
 
ஆனால், அதுவே ஜூலிக்கு செம பிரபலமாகி தற்போது தன்னுடைய செல்வாக்கை வைத்து நன்றாக கல்லா கட்டி வருகிறார். போட்டோ ஷூட், அது, இது என அம்மணி சொகுசாக வாழ்ந்து வருகிறார். 
 
இந்நிலையில் சமீபகாலமாக தமிழில் பிரபலமாக வலம் வரும் ரியாஸ்கான் மற்றும் அவரது மனைவி உமா ரியாஸ்கான் ஆகியோர் மகனுடன் ஜூலி அடிக்கடி வெளியில் செல்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 
 
ரியாஸ்கான் மகன் ஷாரிக் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜிவி பிரகாஷ் மற்றும் ஸ்ரீதிவ்யா நடித்த பென்சில் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 

 
இவர்கள் இருவரும் தற்போது காதல் வயப்பட்டு அடிக்கடி தனிமையில் ஊர் சுற்றி வருவதாக செய்திகள் கோலிவுட் வட்டாரங்களில் ரவுண்டடிக்கிறது. அந்த சந்தேகத்தை ஏற்படுத்தியதே கீழே பதிவிட்டுள்ள இந்த புகைப்படம்தானாம்.

பிரபல நடிகரின் மகனுடன் நெருக்கமாக சுற்றும் பிக்பாஸ் ஜூலி..! - வைரலாகும் புகைப்படம்..! பிரபல நடிகரின் மகனுடன் நெருக்கமாக சுற்றும் பிக்பாஸ் ஜூலி..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 07, 2021 Rating: 5
Powered by Blogger.