ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த " கோ " - மிஸ் செய்த S.T.R - முதன் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..!

 
தனக்கு பிடித்த நடிகையை ‘கோ’ படத்தில் ஹீரோயினாக போடாததால் அந்தப் படத்தில் நடிக்க சிம்பு மிஸ் பண்ணினார்.சில வருடங்களுக்கு முன் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் ‘கோ’. இந்தப் படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளளர். 
 
அவருக்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்திருந்தார்.இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆனது நடிகர் சிம்பு தான். அப்போது நடிகை தமன்னாவை தனக்கு ஜோடியாக போடச் சொன்லி தயாரிப்பாளருக்கு டார்ச்சர் கொடுத்தாராம் நடிகர் சிம்பு. 
 
இயக்குனர் இதற்கு சம்மதிக்காததால் சிம்பு அந்த படத்திலிருந்து விலகினார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கோ படத்தை இயக்கிய இயக்குநர் கே.வி ஆனந்த் சமீபத்தில் கொரோனா ததொற்று ஏற்பட்டு மறைந்தார். 
 
இவரது மறைவிற்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்திருந்தார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், “மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது. 
 
 
அதிர்ந்து பேசாத நல்ல மனிதம் கேவி ஆனந்த் சாருடன் ’கோ’ படத்தில் நான் நடித்திருக்கவேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லி இருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் என சொல்லியிருந்தேன். 
 
 
தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக்கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது.பொய் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன் என்று கூறியிருந்தார். 


இந்நிலையில், முதன் முறையாக நடிகர் சிம்பு கோ படத்தில் நடித்த சில காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த " கோ " - மிஸ் செய்த S.T.R - முதன் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..! ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த " கோ " - மிஸ் செய்த S.T.R - முதன் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on May 12, 2021 Rating: 5
Powered by Blogger.