"பேண்ட்-ஐ தான் பாக்குறீங்களா..?.." - இப்படியும் ஒன்னு.. - ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலடி..!


செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக மாறி தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக படுவேகமாக வளர்ந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். அறிமுகப் படமான மேயாதமான் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. 
 
கிளாமர் இல்லை என்றாலும் படுக்கை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்கள் பிரியா நம்ம வீட்டுப் பெண் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது. 
 
மாபியா படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக அவதாரமெடுத்த ப்ரியா பவானி சங்கருக்கு அது செட் ஆகவில்லை. இதனால் மீண்டும் தன்னுடைய குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் அதே நேரத்தில் மாடர்ன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். 
 
ஹரிஷ் கல்யாண் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் பிரியா இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தவிர 5 மொழிகளில் உருவாகும் அகம் பிரம்மாஸ்மி எனும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். 
 
இந்த படத்திற்காக இதுவரை இல்லாத அளவில் படு கிளாமர் காட்சிகளில் நடிக்க இருப்பதாக செய்திகள் கிளம்பியுள்ளது.ஆனால் பிரியா பவானி சங்கர் தன்னுடைய உடல் அமைப்புக்கு கிளாமர் உடைகள் செட் ஆகாது என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். 
 
ஆனால் நம்ம ரசிகர்களோ, நீங்க போட்டு காட்டுங்க, நாங்க நல்லா இருக்குதா, நல்லா இல்லையான்னு சொல்றோம் என தங்களது குசும்பு தனத்தை காட்டி வருகின்றனர். சமீப காலமாக, நடிகைகள் பலரும் சமூகநலன் சார்ந்த விஷயங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 
 
 
அந்த வகையில், ப்ரியா பவானி ஷங்கரும் ஒரு குழந்தை மருத்துவ செலவுக்காக ஒரு வீடியோவை அப்லோட் செய்து ரசிகர்கள் உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரசிகர் ஒருவர் தன்னுடைய உண்டியல் சேமிப்பை கொடுக்க தயாராக உள்ளதாக கூறியிருந்தார். 
 
இன்னும் பலர் நிச்சயமாக தங்களால் முடிந்த உதவியை செய்கிறோம் என்று கூறினர். அதில் ஆசாமி ஒருவர்.. ப்ரியா பவானி ஷங்கர் அணிந்திருந்த பேண்ட்-ஐ கிண்டல் செய்யும் விதமாக கருத்து பதிவிட்டார். இதனால் கடுப்பான ப்ரியா பவானி ஷங்கர்.. இதே கமெண்ட்-ஐ சாதாரண போஸ்ட்-ல போட்டிருந்தா உங்களை விட அதிக ஹ்யூமர் சென்சுடன் இந்த கமெண்ட்டை நான் அணுகியிருப்பேன். 
 

ஆனால், நான் ஒரு குழந்தையின் மருத்துவ உதவி கேட்டு பேசிக்கொண்டிருக்கும் போது கூட என்னுடைய பேண்ட்-ஐ தான் பாத்துட்டு இருந்தீங்களா..? என கேள்வி எழுப்பி இப்படி ஒன்னு.. இப்படியும் ஒன்னு என்று விசனத்துடன் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் அந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.

"பேண்ட்-ஐ தான் பாக்குறீங்களா..?.." - இப்படியும் ஒன்னு.. - ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலடி..! "பேண்ட்-ஐ தான் பாக்குறீங்களா..?.." - இப்படியும் ஒன்னு.. - ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலடி..! Reviewed by Tamizhakam on June 22, 2021 Rating: 5
Powered by Blogger.