நயன்தாரா காதல் வாழ்க்கை - புகைப்படத்தை வெளியிட்டு கொச்சையாக பேசிய "மேதகு" பட இயக்குனர்..!

 
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. லிவ் இன் முறைப்படி வாழும் அவர்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
 
தமிழில் பிஸியாக இருந்தாலும் மலையாளத்தில் அவ்வவப்போது படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘நிழல்‘ என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில் 7வயது சிறுவனின் தாயாக நடித்திருந்தார். 
 
ஒடிடியில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.நிழல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘பாட்டு‘ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை இயக்குனர் அல்போன்ஸ் இயக்குகிறார். 
 
பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் கதாநாயகராக நடிக்கிறார். பாட்டை மையமாகக் கொண்ட இப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறை ‘மேதகு’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார் கிட்டு என்பவர். 
 
இவர் சாதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில், நயன்தாரா குறித்தும் மோசமாக விமர்சித்திருப்பது தெரிய வந்துள்ளது. மேதகு படம் இந்த மாதம் 25-ஆம் தேதி வெளியானது. 
 
பிரபாகரன் குறித்து நியாயமாக எடுக்கப்பட்ட திரைப்படம் என படம் வெளிவரும் முன்பு பலரும் கிட்டுவை பாராட்டினர். இந்நிலையில், சாதி ஆதரவு கருத்து தெரிவித்ததாக கிட்டு சர்ச்சையில் மாட்டினார். பெரியார் குறித்து இழிவாக கிட்டு பதிவிட்டிருந்ததும் தற்போது சர்ச்சையாகி உள்ளது. 
 
நயன்தாரா குறித்தும் அப்படியொரு பதிவை அவர் இட்டுள்ளார். நயன்தார விக்னேஷ் சிவனை காதலிக்கும் முன்பு சிம்பு, பிரபுதேவாவுடன் காதலில் இருந்தது அனைவரும் அறிந்த விஷயம். நயன்தாராவும் அதனை மறைத்ததில்லை. 
 


 
அந்தப் புகைப்படங்களை கீதையின் வாசகத்துடன் இணைத்து கிட்டு முன்பு பதிவிட்டிருந்தார். பெண்கள் குறித்த மேதகு படம் எடுத்தவரின் பார்வை இப்படித்தான் உள்ளது என பலரும் அந்தப் பதிவை பகிர, உடனடியாக தனது சமூகவலைதள கணக்கை லாக் செய்துள்ளார்.

நயன்தாரா காதல் வாழ்க்கை - புகைப்படத்தை வெளியிட்டு கொச்சையாக பேசிய "மேதகு" பட இயக்குனர்..! நயன்தாரா காதல் வாழ்க்கை - புகைப்படத்தை வெளியிட்டு கொச்சையாக பேசிய "மேதகு" பட இயக்குனர்..! Reviewed by Tamizhakam on June 30, 2021 Rating: 5
Powered by Blogger.