"வெறும் ஜட்டியோட நடு ரோட்ல நடந்து போனேன்..." - வெளிப்படையாக கூறிய நீலிமா ராணி..!


சின்னதிரையில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி இன்றுவரை தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் நீலிமா ராணி. தற்போது எந்த சீரியலிலும் ஆக்டிவாக இல்லை என்றாலும், தன்னுடைய தனிப்பட்ட யூடியூப் சேனல் மூலம் தன் ரசிகர்களை என்டெர்டெயின் செய்துகொண்டிருக்கிறார். 
 
லட்சக்கணக்கில் வியூஸ்களை அள்ளும் இவருடைய சேனலில் என்னென்ன ஸ்பெஷலாக இருக்கிறது..? ‘நீல்ஸ்’ என்பதுதான் இவருடைய சேனலின் பெயர். வழக்கம்போல இவருடைய சேனலில் தனிப்பட்ட காணொளிகள்தான் அதிகம். ஆரம்பித்து 4 மாதங்கள்தான் ஆகிறது. 
 
ஆனால், பெரும்பாலான வீடியோக்கள் லட்சக்கணக்கில் வியூஸ்களை பெற்றிருக்கின்றன. தனிப்பட்ட வீடியோக்கள் மட்டுமின்றி, ‘சகோ’ பாடலையும் வெளியிட்டிருக்கிறார். இந்தப் பாடலை பாடியிருப்பவர் பின்னணி பாடகி சைந்தவி. 
 
இந்த வீடியோ மக்களிடத்தில் அதிக வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் "Fathers Day" ஸ்பெஷலாக தன்னுடைய அப்பா பற்றி ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் நீலிமா ராணி. தன்னுடைய, அப்பா தூங்கிக்கொண்டிருக்கும் போதே இறந்து விட்டார். அப்போது, நான் அவருக்கு அருகில் தான் படுத்திருந்தேன். 
 
 
இப்போது வரை அது என்னுடைய நியாபத்தில் உள்ளது என்று ஆரம்பித்த அவர், தன்னுடைய தந்தையின் வாழ்க்கை பயணத்தை விரிவாக பேசியுள்ளார். அவர் பேசுகையில், விசாக பட்டினத்தில் என்னுடைய தந்தை எலக்ட்ரானிக் கடை ஒன்றை வைத்திருந்தார். 
 
நாங்க இருக்கும் வீட்டின் தெருவில் மூளையில் தான் என் தந்தையுடைய கடை இருக்கும். அப்போது எனக்கு மூன்று வயது இருக்கும், வெறும் ஜட்டி-யை மட்டும் போட்டுக்கிட்டு நான் என்னுடைய அப்பா கடைக்கு தனியா நடந்து போயிட்டு இருந்திருக்கேன்.


எங்க வீட்ல என்னை காணோம்-ன்னு தேடிகிட்டு இருந்திருக்காங்க.. அப்போ ஸ்கூட்டியில எதிர்-ல வந்த என் அப்பா யாருடா இது நம்ம பொண்ணு மாதிரி இருக்குன்னு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கார். 
 
என்னுடைய தந்தை இறந்தது புகைப்பழக்கத்தால் தான்.. அதனால் புகைப்பழக்கம் இருந்தால் இன்றே அந்த பழக்கத்தை விட்டு விடுங்கள் என்று கூறி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்க்க விரும்பினால் இந்த லிங்க்-கில் சென்று பார்க்கலாம்.

"வெறும் ஜட்டியோட நடு ரோட்ல நடந்து போனேன்..." - வெளிப்படையாக கூறிய நீலிமா ராணி..! "வெறும் ஜட்டியோட நடு ரோட்ல நடந்து போனேன்..." - வெளிப்படையாக கூறிய நீலிமா ராணி..! Reviewed by Tamizhakam on June 22, 2021 Rating: 5
Powered by Blogger.