"உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணை.." - மூச்சு முட்ட வைக்கும் தமன்னா..! - திணறும் சிங்கிள்ஸ்..!

 
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக தமன்னா இருக்கிறார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் பல மாதங்களாக முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. 
 
இதனால் நடிகர் நடிகைகள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். நடிகை தமன்னாவும் தொலைக்காட்சிக்கு வந்துள்ளார். 
 
தெலுங்கு டி.வி.யில் சமையல் நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக அவருக்கு அதிக சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. தமன்னா நடித்த ஆக்‌ஷன் படம் 2019-ல் திரைக்கு வந்தது. 
 
அதன்பிறகு தமிழில் அவருக்கு படங்கள் இல்லை. தற்போது தெலுங்கில் சீட்டிமார், மாஸ்ட்ரோ, குர்துண்டா சீதாகாலம், எப்.சி, தட் ஈஸ் மகாலட்சுமி, இந்தியில் போல்சுடியன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இவற்றில் சில படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. 
 
மற்ற படங்களின் படப்பிடிப்புகள் கொரோனாவால் முடங்கி உள்ளன.ஏற்கெனவே தமிழில் விஜய் சேதுபதியும், மலையாளத்தில் பிரித்விராஜும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் இந்த நிகழ்ச்சியின் அந்தந்த மொழி வடிவங்களைத் தொகுத்து வழங்கவுள்ளனர் என்று அறிவிப்பு வெளியானது. 
 
 
தற்போது தெலுங்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தமன்னா அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்துப் பேசியிருக்கும் தமன்னா, "படப்பிடிப்பில் தயாராகவுள்ள அத்தனை சுவை மிகுந்த உணவுகளையும் ருசித்துப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 
 
 
மிகவும் உற்சாகமானதாகவும், மனநிறைவு தருவதாகவும் இந்த நிகழ்ச்சி இருக்கப் போகிறது. எனக்கு என்றுமே சமையலில் ஆர்வம் இருந்துள்ளது. அப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வாய்ப்பு வந்திருப்பது உற்சாகத்தைத் தருகிறது" என்று கூறியுள்ளார். 
 
 
கர்நாடகாவில் பிடாடி என்கிற இடத்தில் இருக்கும் படப்பிடிப்பு அரங்கில் இந்த நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 28 பகுதிகளாக உருவாகும் இந்த நிகழ்ச்சியில் முதல் மற்றும் கடைசிப் பகுதிகள் 90 நிமிடங்களும், மற்ற பகுதிகள் 1 மணி நேரமும் ஓடும். 
 
 
அடுத்த மாதம் இதற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. . கடந்த மாதம், ’நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் மூலம் நடிகை தமன்னா ஓடிடி தளத்தில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், படப்பிடிப்பு தளம் ஒன்றிற்கு வந்திருந்த தமன்னாவை அங்கிருந்த ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் அப்லோடியுள்ளனர். 


உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணை போல இருக்கும் தமன்னா-வை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
"உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணை.." - மூச்சு முட்ட வைக்கும் தமன்னா..! - திணறும் சிங்கிள்ஸ்..! "உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணை.." - மூச்சு முட்ட வைக்கும் தமன்னா..! - திணறும் சிங்கிள்ஸ்..! Reviewed by Tamizhakam on June 25, 2021 Rating: 5
Powered by Blogger.