மதன் OP-யின் மனைவியை கைது செய்த போலீசார் - அதுவும் எப்படி தெரியுமா..?


பெண்களை இழிவாக பேசிய வழக்கில் பிரபல யூட்யூபர் மதன் தேடப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி, தந்தையிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். 
 
தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான வார்த்தைகளால் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து புளியந்தோப்பு காவல்நிலையத்தில் ஆஜராக மதனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மதன் தலைமறைவானார். 
 
இந்நிலையில் பப்ஜி மதனின் தந்தை, மனைவி கிருத்திகா ஆகியோரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.தடை செய்யப்பட்ட "பப்ஜி" ஆன்லைன் விளையாட்டை சட்டவிரோதமாக விபிஎன் எனும் இணையசேவை மூலம் பயன்படுத்தியது, 
 
விளையாட்டின்போது பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்து அருவருக்கதக்க வகையில் பேசியது என்பன உள்ளிட்ட புகார்கள் எழுந்ததை அடுத்து பப்ஜி மதன் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
தலைமறைவாக இருக்கும் மதனை காவல்துறையினர் தேடிவரும் நிலையில், அவர் மீது இதுவரை மட்டும் 159 புகார்கள் வந்துள்ளன. எனவே மதன் மீதான விசாரணையை தீவிரப்படுத்தி இருந்தனர் காவல்துறையினர். 
 

இந்நிலையில், யூட்யூபில் வீடியோக்களை வெளியிடுவது, பெண் குரலில் பேசுவது என அனைத்து வேலைகளையும் செய்ததது அவரது மனைவியே தானாம்.
 
பெண் குரலில் பேசுவதும், அதன் மூலம் தொழிலதிபர்களின் வாரிசுகள் என பலரிடம் இருந்து பணம் பெற்று கோடிக்கணக்கில் சம்பாத்தித்துள்ளனர் என்றும் கூறுகிறார்கள்.
 
மனைவி என்றாலும் இதுவரை முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோரை எதிர்த்து மதனுடன் வாழ்ந்து வந்துள்ளார் மனைவி கிருத்திகா. இதனை தொடர்ந்து, சேலத்தில் பதுங்கி இருந்த மதனின் மனைவியையும், தந்தையையும் கைது செய்து சென்னை அழைத்துவந்து விசாரித்து வருகின்றனர். 
 
இதனை தொடர்ந்து மதனின் மனைவி கிருத்திகாவை சிறையில் அடைக்கும் வேளைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மதன் OP-யின் மனைவியை கைது செய்த போலீசார் - அதுவும் எப்படி தெரியுமா..? மதன் OP-யின் மனைவியை கைது செய்த போலீசார் - அதுவும் எப்படி தெரியுமா..? Reviewed by Tamizhakam on June 16, 2021 Rating: 5
Powered by Blogger.