"ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட்..." - வாயடைத்து கிடக்கும் சக நடிகைகள்..!

 
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளது, இவருக்கு கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.2017 ஆம் ஆண்டு 'மேயாத மான்' படத்தின் மூலம் தன்னுடைய வெள்ளித்திரை பயணத்தை துவங்கிய, பிரியா பவானி ஷங்கர்.
 
ஒரு வருடத்திற்கு ஒரு படம் என சிறப்பான படங்களாகவே தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் இந்த 2021 - ல் மட்டும் இவரது கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளது. 'கசட தபற', 'குருதியாட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'ஹாஸ்டல்', 'ருத்ரன்', 'இந்தியன் 2 ' , '10 தல' , என புதிய படங்களில் கமிட் ஆகிக்கொண்டே செல்கிறார். 
 
இவரது இந்த அசுர வளர்ச்சி பல இளம் நடிகைகளை பிரமிக்க வைத்துள்ளது என்றும் கூறலாம். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளவர் தனுஷ். அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் D44 படத்தில் நடிக்க உள்ளார். 
 
இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றன. அதில் தனுஷுடன் நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் மாப்பிள்ளை படத்திற்கு பிறகு பத்து வருடங்கள் கழித்து தனுஷுக்கு ஜோடியாக மீண்டும் ஹன்சிகா நடிக்க உள்ளாராம். 
 
இதற்கிடையில் தான் மூன்றாவது கதாநாயகி யார்? என்பதில் ஏகப்பட்ட போட்டிகள் நடந்து வந்தன. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் பெயரை டிக்கடித்துள்ளாராம் தனுஷ். ஏற்கனவே ஜெயம் ரவி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமான பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் பல நடிகைகள் அவர் மீது பொறாமையில் இருக்கிறார்களாம்.
 
 
இது ஒருபுறமிருக்க தனுஷுடன் நடித்த நடிகைகள் பலரும் அவருடன் கிசுகிசுக்கப்படுவதுண்டு. அந்தவகையில் நீயும் தனுஷ் விஷயத்தில் மாட்டிக் கொள்ளாதே என பலரும் பிரியா பவானி சங்கர் எச்சரித்து வருகிறார்களாம். ஆனால் அவரோ, ஆனாளப்பட்ட எஸ் ஜே சூர்யாவையே பார்த்து விட்டேன், இவரையும் ஒரு கை பார்த்து விடுகிறேன் என கிளம்பி விட்டாராம். 
 
அடுத்தடுத்து இந்த படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள உள்ள பிரியா பவானி ஷங்கர், தற்போது ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 
 
ஏற்கனவே நடிகர் கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில், பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தாலும் ஹீரோயினாக நடிக்க வில்லை. ஆனால் சமீப காலமாக லாரன்ஸ், சிம்பு, ஜெயம் ரவி போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார் பிரியா பவானி ஷங்கர்.
 
இந்த படத்தை, ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து 'பூலோகம்' படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்க உள்ளதாகவும், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானிக்கு பலர் தங்களுடைய ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
"ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட்..." - வாயடைத்து கிடக்கும் சக நடிகைகள்..! "ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட்..." - வாயடைத்து கிடக்கும் சக நடிகைகள்..! Reviewed by Tamizhakam on July 30, 2021 Rating: 5
Powered by Blogger.