"இதுவும் நல்லா தான் இருக்கு.." - ஷாலினி பாண்டேவை பார்த்து மனசை தேத்தும் ரசிகர்கள்..!

 
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலினி பாண்டே. அதன்பிறகு தமிழில் 100% காதல், கொரில்லா, நிசப்தம் போன்ற படங்களில் நடித்தார். 
 
தென்னிந்திய சினிமாவில் எதிர்பார்த்தபடி படங்கள் இல்லாததால் தற்போது ஹிந்தி சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஷாலினி பாண்டே. 
 
ஏற்கனவே ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்துள்ள ஷாலினி பாண்டே, தற்போது ரன்வீர் சிங்குடன் ஜயீஸ்பாய் ஜோர்தர் என்ற படத்தில் நடிக்கிறார். அடுத்து மகாராஜா என்றொரு ஹிந்தி படத்திலும் கமிட்டாகி உள்ளார். 
 
தென்னிந்திய படங்களில் நடித்து வந்தபோது வெயிட் போட்டிருந்த ஷாலினி பாண்டே தற்போது ஸ்லிம்மாகி, கவர்ச்சியான போட்டோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
 
இவர் உடல் எடையைக் குறைத்தது ரசிகர்களுக்கு ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், மற்றொருபுறம் இதுவும் அழகாகத்தான் இருக்கிறது என மனசை தேற்றிக் கொண்டு உள்ளனர்.

"இதுவும் நல்லா தான் இருக்கு.." - ஷாலினி பாண்டேவை பார்த்து மனசை தேத்தும் ரசிகர்கள்..! "இதுவும் நல்லா தான் இருக்கு.." - ஷாலினி பாண்டேவை பார்த்து மனசை தேத்தும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 21, 2021 Rating: 5
Powered by Blogger.