ஷகிலாவுக்கு முத்தம் கொடுத்த ரோபோ ஷங்கர் - வைரலாகும் புகைப்படம் - காண்டாகும் ரசிகர்கள்..!


கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0’ என்ற புதிய காமெடி ரியாலிட்டி ஷோ ஒளிப்பரப்பாகவுள்ளது. தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் காமெடி ஷோக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. 
 
காமெடி நிகழ்ச்சிகள் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. இந்த நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியும் ஒரு காமெடி ரியாலிட்டி ஷோவை தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ‘கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0’ என பெரியடப்பட்டுள்ளது. 
 
இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்த நகைச்சுவை நிகழ்ச்சியில், தமிழ் தொலைக்காட்சிகளின் முன்னனி நகைச்சுவை நடிகரான ரோபோ ஷங்கர் கன்னித்தீவின் ராஜாவாக களம் இறங்குகிறார். 
 
இதில் அவர் ஜல்சானந்தா என்ற ராஜாவாக வரப்போகிறார். இவருக்கு ஜோடியாக ஷகீலா, ராஜமாதாவாக வருகிறார். இவர்களுடன் அமுதவாணன் மற்றும் பேபி மாதாவாக மதுமிதாவும் உள்ளனர். 
 
இந்நிலையில், ராஜமாதா ஷகிலாவுக்கு முத்தம் கொடுக்கும் ராஜா ரோபோ ஷங்கரின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கடுப்பாகியுள்ளது. ரோபோ சங்கர் பேசும்போது, "எனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
 

கன்னித்தீவு என்ற இந்த ஐடியா மிக தனித்துவமானதும், புதுமையானதுமாக இருக்கிறது. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் அளவுக்கு இந்நிகழ்ச்சி இருக்கப்போகிறது" என்று கூறினார்.
ஷகிலாவுக்கு முத்தம் கொடுத்த ரோபோ ஷங்கர் - வைரலாகும் புகைப்படம் - காண்டாகும் ரசிகர்கள்..! ஷகிலாவுக்கு முத்தம் கொடுத்த ரோபோ ஷங்கர் - வைரலாகும் புகைப்படம் - காண்டாகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 31, 2021 Rating: 5
Powered by Blogger.