அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்பு - தனுஷ் படத்தில் நடித்த ராசியா..?

 
 
கேரளத்து பைங்கிளியான மாளவிகாவிற்கு தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அமைத்தது. பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். 
 
அதனைத் அடுத்து ஜாக்பாட்டாக தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். 
 
அதில் ஹீரோயினுக்கு குறைவாகவே முக்கியத்துவம் இருந்த போதும், ரசிகர்களின் மனதில் தாரளமாக இடம் பிடித்துவிட்டார். அதன் பலன் தமிழ் சினிமாவின் பேவரைட் ஹீரோயின் லிஸ்டிலும் இடம் கிடைத்துவிட்டது. 
 
அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும் மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.