"அம்மாடியோவ்.. நாட்டு சரக்கு தாரிகா-வா இது..?.." - நம்பவே முடியலையே.! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
கன்னடம், மலையாளம், சின்னத் திரை, குத்துப் பாட்டு என அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்த தாரிகா பெரிய இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ஹீரோயின் வேடம் பூண்டு நடிக்க வந்துள்ளார். கன்னடத்தில் படு கிளாமராக நடித்து வந்தவர் தாரிகா. 
 
அங்கு கவர்ச்சி சேவை புரிந்து கொண்டிருந்த அவரை ராதிகா அழைத்து தனது சித்தி சீரியலில் அழுவாச்சி கேரக்டரில் நடிக்க வைத்தார். சித்தி சீரியல் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிலும் பிரபலமானார் தாரிகா. அதன் பின்னர் சீரியல்களில் தீவிரமாக நடித்து வந்த அவர் மறுபடியும் பெரிய திரைக்கு முயற்சித்தார். 
 
ஆனால் அவரைத் தேடி ஹீரோயின் வாய்ப்பு வரவில்லை. மாறாக குத்துப் பாட்டுக்கு ஆடும் வாய்ப்புகள்தான் தேடி வந்தன. யோசித்துப் பார்த்த அவரும் ஆடத் தயார் என அழைப்பு விடவே முதல் பாடலாக தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாட்டுச் சரக்கு நச்சுன்னுதான் இருக்கு பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டார். 
 
தாரிகாவின் படு பயங்கர கவர்ச்சி ஆட்டத்தால் ரசிகர்கள் குதூகலித்தார்களே தவிர தயாரிப்பாளர்கள் யாரும் தாரிகாவை சீந்தவில்லை. ஈர நிலம் உள்ளிட்ட ஓரிரு படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிக்க மட்டுமே வாய்ப்புகள் வந்தன. இதனால் தாரிகாவின் தமிழ் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இதனால் அப்செட் ஆன தாரிகா மலையாளப் பக்கம் கவனத்தைத் திருப்பினார். 
 
 
அங்கும் குத்துப் பாட்டுக்களேக் கிடைத்தன. இதனால் வெறுப்பான தாரிகா, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் கதையாக பெரிய திரைக்குக் கும்பிடு போட்டு விட்டு மறுபடியும் சின்னத்திரைக்கு மாறினார். ஓரிரு சீரியல்களில் நடித்து வந்த அவர் தற்போது மறுபடியும் பெரிய திரைக்கு வருகிறார்.
 
இந்நிலையில், யானை மேல் குதிரை சவாரி என்ற படத்தில் குத்தாட்டம் போட்ட அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைராலகி வருகின்றன. அதில் அவர், உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்.


இதனை பார்த்த ரசிகர்கள், நாட்டுச்சரக்கு தாரிகா-வா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
"அம்மாடியோவ்.. நாட்டு சரக்கு தாரிகா-வா இது..?.." - நம்பவே முடியலையே.! - வாயை பிளந்த ரசிகர்கள்..! "அம்மாடியோவ்.. நாட்டு சரக்கு தாரிகா-வா இது..?.." - நம்பவே முடியலையே.! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 29, 2021 Rating: 5
Powered by Blogger.