அதிர்ச்சி..! - பட்டாஸ் பட ஹீரோயின்.. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்தை நிறுத்துவதாக அறிவிப்பு..!

 
தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த மெஹ்ரீன் பிர்சாடா, தனது காதலரை திருமணம் செய்ய வில்லை என்று அறிவித்து இருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. 
 
இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, தனுஷுடன் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 
 
நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, மார்ச் மாதம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. 
 
தற்போது பவ்யா பிஷ்னோவை தான் திருமணம் செய்யவில்லை என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறி இருக்கிறார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘நானும் பவ்யா பிஷ்னோவும் திருமணத்திற்கு முன்பே எங்கள் உறவை முறித்துக் கொள்கிறோம். 
 

இது எங்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. இனிமேல் பவ்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருடனும் எனக்கு தொடர்பு இல்லை. இது எனது தனிப்பட்ட விஷயம். இதை மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். என் வேலைகளில் இனிமேல் கவனம் செலுத்த இருக்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

அதிர்ச்சி..! - பட்டாஸ் பட ஹீரோயின்.. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்தை நிறுத்துவதாக அறிவிப்பு..! அதிர்ச்சி..! - பட்டாஸ் பட ஹீரோயின்.. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்தை நிறுத்துவதாக அறிவிப்பு..! Reviewed by Tamizhakam on July 03, 2021 Rating: 5
Powered by Blogger.