"அக்மார்க் நாட்டுக்கட்ட... - நேச்சுரல் ப்யூட்டி.." - பவி டீச்சர் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
யூடியூப்பில் ஒளிபரப்பாகி வரும் வெப் சீரிஸ் ஆஹா கல்யாணம். தொலைக்காட்சி மெகா சீரியல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வைரலாகியுள்ளது இந்த தொடர். காதலில் தோல்வி அடைந்த இளைஞன் பிரசாத்தின் வாழ்வில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது இத்தொடர். 
 
ஒவ்வொரு எபிசோடும் பல லட்சம் பார்வைகளை பெற்று வருகிறது. இந்த தொடரில் பவி டீச்சராக நடித்து வரும் பிரிகிதா தான் இணையத்தின் லேட்டெஸ்ட் சென்சேஷன். 
 
பிரேமம் மலர் டீச்சர்க்கு அப்புறம் அதிகமான ஃபேன்ஸ் இருப்பது பவி டீச்சர்க்கு தான். இப்படி ஒரு அத்தை மகள் நமக்கு இல்லையே என இளைஞர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷின் புதிய படம் ஒன்றிலும் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார் அவர். 
 
 
கடலோரக் கவிதைகளின் ஜெனிஃபர் டீச்சர், மலையாள பிரேமம் படத்தின் மலர் டீச்சர்களுக்கு இணையாக சமீபத்திய ஃபேமஸ் டீச்சர் என்றால் அது பவி டீச்சர் தான். மேலும், பிக்பாஸ் புகழ் முகென் ராவ் ஹீரோவாக நடிக்கும் “வேலன்” படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் இவர்.
 
 
யார் கண்டது 2022-ல் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இந்த பவி டீச்சர் வந்து நின்றால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. 


மேலும் தற்போது உள்ள நிலையில் இணையத்தில் நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இவர் சாதரணமான எளிமையான ஒப்ப னைகளுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

"அக்மார்க் நாட்டுக்கட்ட... - நேச்சுரல் ப்யூட்டி.." - பவி டீச்சர் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "அக்மார்க் நாட்டுக்கட்ட... - நேச்சுரல் ப்யூட்டி.." - பவி டீச்சர் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 22, 2021 Rating: 5
Powered by Blogger.