"கன்டென்ட் இல்லன்னு இப்படி பண்றாங்க... இதையெல்லாம் பாக்குறது இல்ல போல.." - கதறும் அனிதா சம்பத்..!

 
ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் அனிதா சம்பத். இவர் கடந்த ஆண்டு மற்றொரு தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தனது செய்தி வாசிப்பு வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார். 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி மக்களின் ஆதரவையும் பெற்றார். நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த அனிதாவுக்கு அவரது அப்பாவின் மரணம் பேரிடியாக இருந்தது. 
 
அதிலிருந்து மீண்ட அவர், மீண்டும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.இருந்தபோதிலும் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார். 
 
 
சமீபத்தில் ரசிகர் ஒருவர் உங்களின் கழுத்தில் தாலி எங்கே என கேட்டதற்கு குங்குமம், பூ, தாலி போன்றவை குறிப்பிட்ட ஒரு மதத்தை குறிப்பது. நான் என்னுடைய மதத்தை வெளிக்காட்ட விரும்பவில்லை. தாலியை மறைத்துக் கொள்வேன். தாலியைக் கழட்டினால் என்ன தப்பு அது என்னுடைய விருப்பம் என பதில் அளித்துள்ளார். 
 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனிதா, எப்போதும் கணவருடன் சேர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, அது என்னவென்றால் அனிதா சம்பத் தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக செய்தி வெளியானது. 


 
இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்து, அனிதா சம்பத் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். கண்டன்ட் இல்லை என்று இப்படி பண்றாங்க, டெய்லி யூட்யூப்ல ஒன்னா விலாக் போடுறதெல்லாம் அட்மின் பாக்குறதில்ல போல என தெரிவித்திருக்கிறார். இதனால் அவர் விவாகரத்து செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டார்.

"கன்டென்ட் இல்லன்னு இப்படி பண்றாங்க... இதையெல்லாம் பாக்குறது இல்ல போல.." - கதறும் அனிதா சம்பத்..! "கன்டென்ட் இல்லன்னு இப்படி பண்றாங்க... இதையெல்லாம் பாக்குறது இல்ல போல.." - கதறும் அனிதா சம்பத்..! Reviewed by Tamizhakam on July 21, 2021 Rating: 5
Powered by Blogger.