"சன்னிலியோனை தொடர்ந்து திரிஷாவும்...." - வைரலாகும் புகைப்படம்..!

 
நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். 
 
தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார் த்ரிஷா. தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன், சுகர், சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தனது அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடியிருந்தார் த்ரிஷா.
 
இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கலால் மற்றும் வாட் வரிகளை மிகவும் அதிகமாக விதித்து வருவதுதான், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
 
 
எனவே பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். அல்லது ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாவது பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. 
 
ஆனால் பெட்ரோல், டீசல் விலை தற்போதைக்கு பெரிய அளவில் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட பிரபல நடிகையான சன்னி லியோன் பெட்ரோல் விலை உயர்வை கேலி செய்யும் விதமாக தனது சமூக வலைதளத்தில் சைக்கிளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “இது ரூ.100 ஐ தாண்டிவிட்டால் உங்கள் உடல்நலனை காத்து கொள்வது அவசியம்.
 
 
சைக்கிள் ஓட்டுவது நலம்” என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், திரிஷாவும் சைக்கிள் ஓட்டுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

"சன்னிலியோனை தொடர்ந்து திரிஷாவும்...." - வைரலாகும் புகைப்படம்..! "சன்னிலியோனை தொடர்ந்து திரிஷாவும்...." - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on July 21, 2021 Rating: 5
Powered by Blogger.