தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி 31 வயது இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா ஷெட்டி, அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.
இந்த நிலையில் தற்போது யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ‘மிஸ் ஷெட்டி’என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த படத்தில் நவீன் பாலிஷெட்டி என்பவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அனுஷ்காஷெட்டி அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாயகன் நவீனுக்கு 31 வயது என்பதும் அனுஷ்கா ஷெட்டிக்கு 39 வயது என்பதும், இந்த வயது வித்தியாசம் கதைக்கு மிக பொருத்தமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை மகேஷ் என்பவர் இயக்கவுள்ளார்.இதற்கிடையே, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகள் ஆக்டிவாக இருக்கும்போது, அனுஷ்கா, இன்ஸ்டாவில் மட்டுமே இருந்தார்.
சமீபத்தில், டிவிட்டரிலும் இணைந்து அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் படங்கள் பற்றிய செய்திகளை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய இடுப்பழகை காட்டும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த இடுப்புக்கு ஈடு கொடுக்க முடியுமா..? என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.
0 கருத்துகள்