"என்னம்மா ட்ரெஸ் இது..?" - அது வரை கிழிந்துள்ள உடையில் ஸ்ருதிஹாசன்..! - வைரல் புகைப்படம்..!

 
தமிழ் சினிமாவில் நடிகை சுருதி ஹாசன் சூர்யா நடித்த ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விஷால் என்று தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 
 
இந்தி, தெலுங்கு சினிமாக்களையும் சுருதி விட்டு வைக்கவில்லை. தற்போது மீண்டும் தமிழில் குதிக்கும் ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இவர் தெலுங்கில் சில வருடங்கள் முன்னர் ரவிதேஜாவுடன் பல்ப் என்ற படம் நடித்தார். 
 
அந்த படத்தில் சுருதி ஹாசன் ஆளே அடையாளம் தெரியாத மாதிரி அம்சமாக இருப்பார். நடிகை சுருதிஹாசன் ஆரம்ப காலத்தில் நிறைய கவர்ச்சி வேடத்தில் நடித்து இருப்பார். அதிலும், இந்த படத்தில் எக்கசக்கமாக கிளாமர் தூக்கலாக இருக்கும். இந்தி படங்களில் அவர் கவர்ச்சியாக வருவதாக விமர்சனங்கள் கிளம்பின. 
 
சமீபத்தில் சுருதிஹாசன் கவர்ச்சியாக ‘போஸ்’ கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள் இணைய தளங்களில் பரவி உள்ளன.‘‘நான் கவர்ச்சியாக இருக்கிறேன். அதனால் எல்லோருக்கும் கவர்ச்சியாக தெரிகிறேன். புதுமையாக யோசிப்பது கூட கவர்ச்சிதான். நடிகைகள் கவர்ச்சியை மட்டுமே நம்பிக்கொண்டு சினிமாவில் நீடிக்க முடியாது. 
 
கவர்ச்சியும், திறமையும் சேர்ந்து இருக்க வேண்டும். என்னை பார்த்து யாரேனும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால் சந்தோஷப்படுவேன். ஆனாலும் கவர்ச்சியின் எல்லை எனக்கு தெரியும். அதை மீற மாட்டேன். எனது ரசிகர்கள் நான் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்கு முக்கியத்துவம் தருவேன். அவர்கள் எனக்கு ஒரு நடிகையாக மனதில் இடம் தந்தால் போதும்.’’என்கிறார் அம்மணி. 
 

இந்நிலையில், விருது விழா ஒன்றிற்கு வந்த அவர் முன் பக்கம் அதுவரை கிழிந்தது போல இருக்கும் ஒரு உடையை அணிந்து வந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னம்மா ட்ரெஸ் இது..? இந்த மாதிரி ட்ரெஸ் எல்லாம் எங்க கிடைக்குது..? என்று கலாய்த்து வருகிறார்கள்.