"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..?" - ரசிகருக்கு மீனா கொடுத்த எதிர்பார்க்காத பதில்..!


1980 களில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு டாப் ஹீரோயினாக உயர்ந்தவர். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில், ரஜினி அங்கிள் என கூப்பிட்டு நடித்த மீனா, பிறகு வளர்ந்து ரஜினிக்கு ஜோடியாக முத்து, வீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 
 
கமல், அஜித், சரத்குமார், கார்த்திக், விஜயகாந்த், பார்த்திபன், ராஜ்கிரண் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக இருந்துள்ளார் மீனா. 
 
திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த மீனா, பிறகு தனது மகள் நைனிகாவையும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.பேபி நைனிகா முதல் படத்திலேயே விஜய்யுடன் தெறி இணைந்து நடத்தி பிரபலமானார். 
 
 
ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அம்மாவை போலவே பல விருதுகளை வென்று விட்டார். மகள் நடிக்க வந்த சிறிது காலத்திலேயே மீனாவும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.இந்நிலையில் மீனா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் தனது ஃபாலோயர்ஸ்களுக்காக சமீபத்தில் கேள்வி பதில் செஷனை நடத்தினார். 
 
இந்த செஷனின் போது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி பதில் அளித்தார் மீனா. தன்னிடம் கேள்வி கேட்க நினைப்பவர்கள் கேள்விகளை கேட்கலாம் என்றும் அறிவித்த மீனா, ரசிகர்களிடம் இருந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்ட கேள்விகளை பெற்றார். 
 
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நடிகை மீனா சில சிக்கலான கேள்விகளுக்கு கூட பொறுமை இழக்காமல், கோபப்படாமல் பக்குவமாக லேசான முறையில் பதிலளித்தார். 


தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்ட ஒரு ரசிகருக்கு பதில் அளித்த மீனா, கணவருடன் மணக்கோலத்தில் இருக்கும் ஃபோட்டோவை ஷேர் செய்து கொஞ்சம் லேட் என்று கண்சிமிட்டும் ஃபன் எமோஜியுடன் வேடிக்கையாக பதில் கொடுத்துள்ளார்.
"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..?" - ரசிகருக்கு மீனா கொடுத்த எதிர்பார்க்காத பதில்..! "என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..?" - ரசிகருக்கு மீனா கொடுத்த எதிர்பார்க்காத பதில்..! Reviewed by Tamizhakam on August 05, 2021 Rating: 5
Powered by Blogger.