"மொரட்டு கட்ட.." - கிளு கிளு கிளாமர் போஸ் - இணையத்தை திணறதிக்கும் ஜி.வி.பிரகாஷ் ஹீரோயின்..!

 
தமிழ் சினிமாவின் புதிய வரவு பலக் லால்வானி. ஜூவா, அப்பயித்தோ அம்மாயி தெலுங்கு படங்களில் நடித்தவருக்கு அங்கு நினைத்த இடம் கிடைக்கவில்லை. இப்போது பெரும் நம்பிக்கையுடன் தமிழுக்கு வருகிறார். 
 
தமிழில் அவர் அறிமுகமானது சகா என்ற படத்தில். அ அடுத்து நடித்த படம் குப்பத்துராஜா. இதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்தார். இதுதவிர ஆதி, ஹன்சிகா நடிக்கும் பார்ட்னர் படத்திலும் நடித்து வருகிறார். 
 
குப்பத்துராஜா படத்தில் நடித்தது பற்றி பலக் லால்வானி கூறியதாவது, இந்த படத்தை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகம் மற்றும் பதட்டம் கலந்த ஒரு உணர்வைக் கொண்டிருந்தேன். 
 
 
இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டும். கதாபாத்திரத்தை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டி இருந்தது. 
 
 
என் வசனங்களில் மிகவும் பொறுமையாகவும் உதவியாகவும் இருந்த இயக்குனர் பாபா பாஸ்கர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பலருக்கும் நன்றி.சென்னையின் சேரி பகுதியில் கதை நடக்கிறது, அங்கு வாழும் ஒரு பெண்ணாக நடித்திருக்கிறேன். சும்மா வந்து போகும் கதாப்பாத்திரமாக இருக்காது. 
 
 
குப்பத்து ராஜா படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது, ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக படாத பாடு பட்டு வரும் அம்மணி கவர்ச்சி ஆயுதத்தை எடுத்து வீச தொடங்கியுள்ளார். 


 
இவரது இன்ஸ்டாவை எட்டிப்பார்த்தால் எல்லாமே கிளு கிளுபான புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து வழிந்து வருகிறார்கள்.