ரம்யா பாண்டியன் ஒரு பக்கம், விதவிதமான கவர்ச்சி போஸ், மற்றும் யோகா போசுகள் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்றால், மற்றொரு புறம் பிகினி உடை போட்டோ ஷூட்டில் அவரையே தூக்கி சாப்பிட்டு விட்டார் அவரது தங்கை கீர்த்தி பாண்டியன்.
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாரிசு நடிகர், நடிகைகளின், வரவேற்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனும் தரமான படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார்.
அறிமுக இயக்குனர் ஹரி ராம் இயக்கிய துப்பா படம் தான் இவரது அறிமுக திரைப்படம்.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில், நடித்த தர்ஷன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து 'அன்பிற்கினியால்' என்கிற படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் ஒல்லியாக இருப்பதால் பள்ளியில் படிக்கும் பொழுது கிண்டலுக்கு உள்ளாகியதாகவும், பதின்ம வயது பருவத்திலும் அந்த கேலி கிண்டல் தொடரவே இரவில் தூக்கத்தில் அழுததாக கீர்த்தி பாண்டியன் தெரிவித்திருந்தார்.
தற்போது, பிகினி உடையில் கடற்கரையில் போஸ் கொடுத்து இளசுகளை திக்கு முக்காட வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் பர்ஃபெக்ட் பிகினி பாடி.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.