“மனைவியின் தீராத உடலுறவு வெறி” நள்ளிரவில் விசித்திரமான முறையில் உல்லாசம்! துடிதுடித்து பிரிந்த உயிர்!

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணா தாலுகாவில் உள்ள மாரளகாலா கிராமத்தில் பரபரப்பு ஏற்படுத்திய கொலை வழக்கு ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கோவில் அர்ச்சகரான சித்தலிங்கப்பா (வயது 46) என்பவர், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து, காலையில் கோவிலுக்கு சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம்.

அவருக்கு மனைவி ஷாலினி (32) மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். சித்தலிங்கப்பா தன் அக்கா மகள் ஷாலினியைத்தான் திருமணம் செய்திருந்தார்.

ஆனால், கணவர் கோவிலில் பணியாற்றும் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த ஷாலினிக்கு, அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஹரிஷ் (33) உடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இந்த உறவு நாளுக்கு நாள் ஆழமாகி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணவர் வீட்டில் உறங்கும் போது, மொட்டைமாடிக்கு சென்று அங்கு தன்னுடைய கள்ளக்காதலன் ஹரிஷை வர வைத்து, கணவர் வீட்டில் இல்லாத போது தன்னுடைய வீட்டுக்கு வர வைத்து, ஹரீஷ் வீட்டில் யாரும் இல்லாத போது அவரின் வீட்டுக்கு சென்று என தன்னுடைய அடங்காத உடலுறவு வெறியை விசித்திரமான முறையில் தீர்த்து வந்திருக்கிறார்.

ஒரு வருடத்திற்கு முன்பு இதை அறிந்த சித்தலிங்கப்பா, இருவரையும் கண்டித்திருந்தார். ஆனால், ஷாலினி தொடர்ந்து ஹரிஷுடன் பழகி வந்ததால், தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கணவன் மனைவியை அடித்து துன்புறுத்தியதாகவும் தகவல்கள் உள்ளன.

இதனால் ஆத்திரமடைந்த ஷாலினி, கணவனைப் பிரிந்து ஹரிஷுடன் வாழ்வதற்கு தடையாக இருப்பதாகக் கருதி, கணவரைக் கொலை செய்ய திட்டமிட்டார்.

கடவுள் பக்தரான சித்தலிங்கப்பா வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால், அன்று அவருக்கு உடல் பலம் குறைவாக இருக்கும் என்பதைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தனர்.

மார்ச் 6, வெள்ளிக்கிழமை அன்று, கோவிலுக்குச் சென்ற சித்தலிங்கப்பாவை வழிமறித்த ஹரிஷும் அவரது நண்பர்களான சந்தோஷ் குமார் (29), கணேஷ் (29) ஆகியோரும் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்தனர்.

பின்னர், உடலையும் இரு சக்கர வாகனத்தையும் குளத்தில் வீசி, விபத்து போல சித்தரித்தனர்.

உறவினர்கள் உதவியுடன் உடலை மீட்ட ஷாலினி, அவசர அவசரமாக இறுதிச் சடங்குகளை முடித்துப் புதைத்துவிட்டார்.

ஆனால், இறப்பில் சந்தேகமடைந்த உறவினர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கபட்டணா கிராம போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கள்ளக் காதலுக்காக கணவரைக் கொலை செய்த சதி வெளியானது. ஷாலினி தனது கணவரின் அசைவுகளை ஹரிஷிடம் தெரிவித்து, கொலைக்கு திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இதையடுத்து, ஷாலினி, ஹரிஷ் மற்றும் அவரது இரு நண்பர்கள் என நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் மாரளகாலா கிராமம் மற்றும் ஸ்ரீரங்கபட்டணா பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவில் அர்ச்சகரின் மரணத்துக்கு பின்னால் இருந்தது மனைவியின் கள்ளக்காதல் என்பது தெரியவந்ததால், பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary in English : In Srirangapatna, Mandya district, a 42-year-old temple priest died under suspicious circumstances on a Friday. His wife and her associate, along with others, were later arrested after investigation revealed a planned incident linked to an extramarital relationship. The body was found in a pond, initially appearing as an accident.