தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த். தமிழில் 2008ம் ஆண்டு வெளியான வாமனன் படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர்.
நூற்றென்பது, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா, எல்.கே.ஜி. உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார்.
ஸ்ரீதேவி மற்றும் அஜித் நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றவர், அங்கும் சில படங்களில் நடித்த பிரியா ஆனந்தால் பெரிதாக வெற்றி வாகை சூடமுடியவில்லை.
எனவே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா ஆனந்த், அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி, கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.
அந்த வகையில், சூரிய வெளிச்சத்தில் தன்னுடைய உடலை நிழலாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கியா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tags
Priya Anand