"ஊரெல்லாம் உன்ன ஜாதி வெறியன்னு முத்திரை குத்தி வச்சிருக்காங்க.." - மோகன் ஜி-யின் அடுத்த சம்பவம்..!


மோகன் ஜி இயக்கம், நடிகர் ரிச்சர்ட் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‛ருத்ர தாண்டவம்'. இவர்கள் கூட்டணியில் வெளியான திரெளபதி படம் நாடக காதல், திருமணம் குறித்து பேசியது. 
 
இதற்கு ஒருபுறம் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி சர்ச்சையானது. இப்போது உருவாகி உள்ள ருத்ர தாண்டவம் படமும் சமூகத்தில் நிலவும் மற்றுமொரு முக்கிய பிரச்னையை குறித்து பேசப்போகிறது. 
 
இந்தப்படமும் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. மதமாற்றம், ஜாதி அரசியல் மற்றும் பிசிஆர்., சட்டங்கள் ஆகியவற்றை இந்தப்படம் பேச போகிறது என்பதை இன்று வெளியாகி உள்ள டிரைலரை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. 
 
கிறிஸ்துவராக மதம் மாறினால் பிசிஆர்., சட்டம் செல்லாது, என்னப்போய் சாதி வெறியனு ஊரெல்லாம் பேச வச்சுடீங்க... போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் நிச்சயம் இந்த படமும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என டிரைலரில் வரும் காட்சிகளை பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. 
 
அதேசமயம் டிரைலரில் கவுதம் மேனன் சகட்டுமேனிக்கு கெட்டவார்த்தை பேசி உள்ளார். ருத்ர தாண்டவம் படத்தில் நாயகனாக ரிச்சர்ட்டும், நாயகியாக தர்ஷா குப்தாவும் நடித்துள்ளனர். மற்றுமொரு முக்கிய வேடத்தில் வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன் நடித்துள்ளார். 
 
 
இவர்கள் தவிர ராதாரவி, தம்பி ராமைய்யா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்தமாதம் வெளியாக உள்ளது.

"ஊரெல்லாம் உன்ன ஜாதி வெறியன்னு முத்திரை குத்தி வச்சிருக்காங்க.." - மோகன் ஜி-யின் அடுத்த சம்பவம்..! "ஊரெல்லாம் உன்ன ஜாதி வெறியன்னு முத்திரை குத்தி வச்சிருக்காங்க.." - மோகன் ஜி-யின் அடுத்த சம்பவம்..! Reviewed by Tamizhakam on August 24, 2021 Rating: 5
Powered by Blogger.