"புண்படுத்திட்டா.. - எட்றா கைய.." - முன்னணி நடிகருடன் நெருக்கமாக ப்ரியா பவானி..! - கதறும் ரசிகர்கள்..!


தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ரீது வர்மா நடித்து 2016 இல் வெளியான திரைப்படம் பெல்லி சுப்லு.இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி, வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த திரைப்படம் தமிழில் உருவாகிறது. 
 
தமிழில் இந்த திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் இணை நடிக்கின்றனர். நடிகர் ஹரீஷ் கல்யாண் பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். 
 
இதனை தொடர்ந்து ரைசாவுடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்திலும், அதனை அடுத்து, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்திலும் நடித்தார். 
 
அதன்பின்னர் தாராள பிரபு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
 
அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் ஹரிஷ் கல்யான்2017 ஆம் ஆண்டு 'மேயாத மான்' படத்தின் மூலம் தன்னுடைய வெள்ளித்திரை பயணத்தை துவங்கிய, பிரியா பவானி ஷங்கர்... ஒரு வருடத்திற்கு ஒரு படம் என சிறப்பான படங்களாகவே தேர்வு செய்து நடித்து வந்தார். 
 
 
ஆனால் இந்த 2021 - ல் மட்டும் இவரது கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளது. 'கசட தபற', 'குருதியாட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'ஹாஸ்டல்', 'ருத்ரன்', 'இந்தியன் 2 ' , '10 தல' , என புதிய படங்களில் கமிட் ஆகிக்கொண்டே செல்கிறார். 
 
 
இவரது இந்த அசுர வளர்ச்சி பல இளம் நடிகைகளை பிரமிக்க வைத்துள்ளது என்றும் கூறலாம். படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இவருக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில், ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து தனது இன்ஸ்டாவில் ரீல் விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், புண்படுத்திட்டா.. எட்றா கைய.. ஒரு வேளை இருக்குமோ.. என பதறி வருகிறார்கள்.

"புண்படுத்திட்டா.. - எட்றா கைய.." - முன்னணி நடிகருடன் நெருக்கமாக ப்ரியா பவானி..! - கதறும் ரசிகர்கள்..! "புண்படுத்திட்டா.. - எட்றா கைய.." - முன்னணி நடிகருடன் நெருக்கமாக ப்ரியா பவானி..! - கதறும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 27, 2021 Rating: 5
Powered by Blogger.