விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2019-ல் இருந்து ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் காற்றின் மொழி. அதில் ஹீரோயினாக நடித்திருந்தவர் பிரியங்கா எம் ஜெயின். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், வளர்ந்தது, படித்தது எல்லாமே பெங்களூரில்.
ஸ்ரீ என்.கே.எஸ் ஆங்கில பள்ளியில் பள்ளி படிப்பையும், ஜெயின் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தார். அழகான, திறமையான, பிரியங்கா எம் ஜெயின் தனது 16 வயதில் திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரியங்கா, ஃபேஷன் ஷோவிலும் பங்கேற்றுள்ளார். பல இசை ஆல்பங்கள் மற்றும் டி.வி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
அதற்கடுத்து 2015 ஆம் ஆண்டில், நிருப் பண்டாரியுடன் இணைந்து, கன்னட த்ரில்லர் திரைப்படமான ’ரங்கிதரங்காவில்’ நடித்தார். இதனை அனுப் பண்டாரி இயக்கியிருந்தார்.
அதன் பிறகு கார்றின் மொழி சீரியலில் நடித்தார். அந்த சீரியலில் கிராமத்து தோற்றத்தில் நடித்த பிரியங்கா, நிஜத்தில் படு மாடர்ன். அவரின் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஸ்டைலிஷ் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் அள்ளும்.
இந்நிலையில் பிரியங்கா அவரின் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் விளையாடும் காட்சி உள்ளது.
இதைப் பார்த்தவர்கள், அந்த நபரை பிரியங்கா காதலிக்கிறார் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போகிறார் எனவும் கூறுகிறார்கள். உண்மையை பிரியங்கா தான் சொல்ல வேண்டும்.
0 கருத்துகள்