5 வருடத்திற்கு முன்பு நானும் ரெளடி தான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே பற்றிய காதல், இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது. படப்பிடிப்பு டூ பாரின் டூர் வரை இருவரும் எங்கு சென்றாலும் கையை கோர்த்துக்கொண்டு ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள்.
காதலிப்பது எல்லாம் சரி எப்போ கல்யாணம் என ரசிகர்கள் கேட்டால் மட்டும் புரியாத மாதிரி ஒரு பதிலை சொல்லி நழுவி ஓடுகிறார்கள். கோவாவில் அவர்கள் தங்கியுள்ள ஓட்டலில் இருக்கும் கார்டனில் நயன்தாரா உலவும் புகைப்படங்களை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி அளித்த பேட்டி ஒன்றில், எங்களுக்குன்னு சில நோக்கங்கள் இருக்கு. அதை முடிச்சுட்டுதான் சொந்த வாழ்க்கைக்கு வரணும்னு நினைக்கிறோம் என்று கூறியிருந்தார்.
இப்போது விக்னேஷ் சிவன், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றார். அங்கு விஜய்சேதுபதி, சமந்தா நடிக்கும் காட்சிகளை ஷுட் செய்தார்.
இதற்கிடையே, நடிகை நயன்தாரா, அண்ணாத்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றார். இதனை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில், நயன்தாரா இடுப்பில் கை போட்டவாறு சிங்கிள்ஸை பொறாமை படுத்தும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த போட்டோவில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கைகளைப் பிடித்தபடி செம ரொமான்டிக்காக உள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது. சில நெட்டிசன்ஸ், எங்க தலைவியை நல்லா பார்த்துக்கோங்க விக்னேஷ் சிவன் என கூறியுள்ளனர்.
0 கருத்துகள்