"வயசு வெறும் நம்பர் தான்.... உங்களுக்கு வயசே ஆகல.." - புன்னகையரசி லேட்டஸ்ட் கிளிக்ஸ் - உருகும் ரசிகர்கள்..!

 
புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 
 
2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். 
 
அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. பொதுவாகவே திரையுலகில் காதல் திருமணம் என்பதும், அதன் பிறகு விவாகரத்து செய்துகொள்வதும் சகஜம் என ஆகிவிட்டது, ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து, விட்டுகொடுத்து போகிறார்கள். 
 
 
அப்படி இருக்கையில் இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 
 
 
அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள்.


இந்நிலையில், சினேகா வெளியிட்டுள்ள அவருடைய சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், "வயசு வெறும் நம்பர் தான் மேடம்".. உங்களுக்கு வயசே ஆகல.. என்று உருகி வருகிறார்கள்.

"வயசு வெறும் நம்பர் தான்.... உங்களுக்கு வயசே ஆகல.." - புன்னகையரசி லேட்டஸ்ட் கிளிக்ஸ் - உருகும் ரசிகர்கள்..! "வயசு வெறும் நம்பர் தான்.... உங்களுக்கு வயசே ஆகல.." - புன்னகையரசி லேட்டஸ்ட் கிளிக்ஸ் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 18, 2021 Rating: 5
Powered by Blogger.