"சின்னச்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு சின்னத்தூரல் போட.." என்ற மனதை வருடும் பாடல் இடம் பெற்ற குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் ஹீரோயின் தனன்யா தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை.
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் பள்ளி மாணவியாக பக்கா தமிழ் பெண்ணாக தோன்றிய இவர் நடிகை என்பதை தாண்டி M.B.B.S படுத்த ஒரு டாக்டரும் கூட.
2009-ம் ஆண்டு வெளியான ‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான ராஜமோகன் தர்ஷனா என்ற இவரது பெயரை தனன்யா என்று மாற்றினார்.
தொடர்ந்து "வெயிலோடு விளையாடி" என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார் அம்மணி. அதன் பிறகு, சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் வராததால் கடந்த 2015-ம் ஆண்டு ஆர்யன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
அதன் பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த இவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீப காலமாக தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு.. அவங்களா இவங்க.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.