வேற வழியே இல்ல.. இனிமே கவர்ச்சி தான்.. - அதகளம் பண்ணும் நிவேதா பெத்துராஜ்..!

 
நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது தமிழில் பொன் மாணிக்கவேல், பார்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 
 
இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.நடிகை நிவேதா பெத்துராஜ் அடிக்கடி புடவை,மாடர்ன் உடை, சுடிதார், லெஹங்கா இப்படி அனைத்து விதமான ஆடைகளிலும் தனது போட்டோ ஷூட் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.
 
தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்திவரும் நிவேதா பெத்துராஜ் இரு மொழிகளிலுமே, ஏதாவது ஒரு படத்தில் ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தார். அந்த குறையை தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ள ‘பாகல்’ திரைப்படம் பூர்த்தி செய்துள்ளது. 
 
 
இந்த வெற்றியை சமீபத்தில் அவரே ஆனந்தக் கண்ணீர் விட்டு கொண்டாடித் தீர்த்துள்ளார். தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனும் ‘பாகல்’ படக் குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.இதையடுத்து. நிவேதா பெத்துராஜுக்கு தற்போது தெலுங்கில் பல கதைகள் குவியத் தொடங்கியுள்ளன. 
 
 
இந்தபடம் வெளிவருவதற்கு முன்பாகவே 2 கதைகள் கேட்டு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது அடுத்தடுத்த புதியகதைகளையும் கேட்டு வருகிறார் நிவேதா பெத்துராஜ். ஆனால், சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் கிளாமர் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் அம்மணி.


 
நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களில் நடித்து நடித்து சோர்வடைந்து விட்டதாக கூறியுள்ளார். எனக்கு எப்பவும் சீரியசான கதாபாத்திரங்கள் வருகின்றன. கதாபாத்திரங்களைத் தவிர தன்னுடைய குறும்புத்தனம் மற்றும் கவர்ச்சி பக்கத்தையும் காண்பிக்குமாறு உள்ள கதாபாத்திரங்களை செய்ய விரும்புகிறேன். 
 

 
ஏதாவது சில இயக்குனர்கள் கவர்ச்சியான கதாபாத்திரத்துடன் வருவார் என்று நம்புகிறேன். அப்படி கவர்ச்சி காட்டும் எந்த இயக்குனராவது கேட்டால் நிச்சயம் நான் ஏற்றுநடிப்பேன் என்று ஒப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார்.