விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற ராஜா ராணி சீரியலில் நடிகை ஆல்யா மானசாவும் நடிகர் சஞ்ஜீவும் ஜோடியாக நடித்தனர். இருவரும் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது.ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ராஜா ராணி 2 ஒளிபரப்பாகி வருகிறது.
இதில், நாயகியாக ஆல்யா மானசா நடிக்கிறார். அவருடைய கணவர் சஞ்ஜீவ் காற்றின்மொழி சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார்.டிவி சீரியல் ஜோடிகளில் பிரபலமான ஜோடியாக வலம் வரும் ஆல்யா மானசா – சஞ்ஜீவ் ஜோடி சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர்களாக உள்ளனர்.
சமூகவலைத்தள பக்கங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் இவர்கள் தற்போது ‘சஞ்ஜீவ் ஆல்யா’ என்ற யூடூப் சேனலை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஒரு தடவ முட்டிட்டு விட்டா கொம்பு மொழச்சிடும் என ஜெனிலியா செய்யும் அதே சேட்டையை சீரியலில் செய்துள்ளார் ஆல்யா மானசா.
இதனை பார்த்த ரசிகர்கள், இதையெல்லாம் ஜெனிலியா பண்ணும் போதே வெறியானுச்சு.. போயிரு.. அதான் உனக்கு நல்லது என மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.
0 கருத்துகள்