"அவரை உருக உருக காதலித்தேன்.." - ஆனால்... கடைசியில்... - வெளிப்படையாக போட்டு உடைத்த அனுப்பமா..!


இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் அனுபமா. நிஜ வாழ்க்கையில் காதலித்தது உண்டா என்று ரசிகர் ஒருவர் கேட்டார். 
 
அதற்கு அனுபமாவோ, ஆமாம். அது உண்மையான காதல் ஆனால் முறிந்துவிட்டது என்றார். அந்த காதல் நீண்ட காலம் நிலைக்கவில்லை, காதலரை பிரிய வேண்டியதாகிவிட்டது என்று தெரிவித்தார் அனுபமா.
 
தன் காதல் முறிவு குறித்து சமூக வலைதளத்தில் மனம் திறந்து பேசியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய பிரேமம் படம் மூலம் நடிகையானவர் அனுபமா பரமேஸ்வரன். 
 
தனுஷின் கொடி மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். அவர் மலையாளம், தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். 
 
என்ன வேலையாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அனுபமா.சமீபத்தில் 18 பேஜஸ் என்ற தெலுங்குப் படத்தில் கமிட்டானார். நாயகன் நிகில் சித்தார்த். 
 

அனுபமாவின் ராசிப்படி அவருடனும் காதல் என கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில், நீங்கள் காதலித்திருக்கிறீர்களா என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்தவர், "ஆம், நான் ஒருவரை உண்மையாக உருக உருக காதலித்தேன், ஆனால். அந்தக் காதல் ப்ரேக் அப்பில் முடிந்தது" என பதிலளித்துள்ளார். 
 
அந்த காதலர் கிரிக்கெட் வீரர் பும்ராவா என்பதை அனுபமா கூறவில்லை. அதேநேரம், அனுபமாவும், பும்ராவும் காதலிக்கவில்லை என அனுபமாவின் குடும்பத்தார் சார்பில் மறுப்பு வெளியிதடார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
"அவரை உருக உருக காதலித்தேன்.." - ஆனால்... கடைசியில்... - வெளிப்படையாக போட்டு உடைத்த அனுப்பமா..! "அவரை உருக உருக காதலித்தேன்.." - ஆனால்... கடைசியில்... - வெளிப்படையாக போட்டு உடைத்த அனுப்பமா..! Reviewed by Tamizhakam on August 06, 2021 Rating: 5
Powered by Blogger.