சமீபத்திய நாட்களின் சென்சேஷனல் நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’தான். இதன் இரண்டாம் சீஸன் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், புகழ், ஷிவாங்கி, அஸ்வின், பவித்ரா லட்சுமி, பாலா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவைப் பெற்றவர்களின் பட்டியல் நீளம்.
அந்த வரிசையில் கியூட் போட்டியாளராகக் களமிறங்கி கோமாளியான புகழோடு இணைந்து சுவாரசிய கன்டென்ட் கொடுத்தவர் பவித்ரா லட்சுமி.இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தற்போது டிவி முன்பு கிடக்கின்றனர் .
அதுவும் சனி மற்றும் ஞாயிறு இரண்டு தினங்களிலும் இது ஒளிபரப்பப்படும் இதற்காக காத்திருக்கும் ரசிகர்கள் அதிகம் தான் தற்போது இந்த சீரியல் முடிவடையும் தருவாயில் நெருங்கி விட்டாலும் இந்த சீரியலின் கன்டஸ்டன்ட்களுக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள்.
அதிலும் முக்கியமாக பவித்ரா லட்சுமிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிக் கொண்டிருக்கிறது. பவித்ரா இந்த நிகழ்ச்சியின் மூலமாக முதல்முறையாக ரசிகர்களை கவர ஆரம்பித்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கும் ரசிகர்களுக்கும் ஒரு இணக்கம் ஏற்பட்டு விட்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இவர் புகழுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் மற்றும் புகழை கொஞ்சி பேசும் போது முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன் வேற லெவல் இருக்கிறதாம். குக் வித் கோமாளி வெற்றியைத் தொடர்ந்து, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் பவித்ரா லக்ஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
இதில், நகைச்சுவை நடிகர் சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இணையத்தில் ஆக்டிவ் குயினாக இருக்கும் இவர் தற்போது அண்டர் ஆர்ம் டியோட்ரண்ட் ஒன்றின் விளம்பர ரீல்ஸ் விட்டுள்ளார. இதில், அம்மணியின் நடன அசைவுகளை பார்த்த ரசிகர்கள், ச்சீ.. என்ன கன்றாவி இது..? என்று முகம் சுழித்து வருகிறார்கள்.
0 கருத்துகள்