"சூடான ரொமான்ஸ்.. வரம்பு மீறி குத்தாட்டம்.." போடும் பிக்பாஸ் அனிதா - தீயாய் பரவும் வீடியோ..!

 
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக பிரபலமாகி வருபவர்தான் அனிதா சம்பத். 
 
இவர் தொடக்கத்தில் செய்தி வாசிப்பாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கி, அதன்பின் கடந்த 2020ம் ஆண்டு விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். 
 
மேலும் இவர் காலா, காப்பான், ஆதித்ய வர்மா, 2.0, தர்பார், டேனி என பல படங்களில் செய்தி வாசிப்பாளராகவும் ஒரு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
அதன் பின் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் பங்கேற்று, பிக் பாஸ் சீசன் 2 இல் பங்கேற்ற ஷாரிக் உடன் ஜோடி சேர்ந்து நடனம் ஆடி வருகிறார். 
 
இந்நிலையில் அனிதாவுடன் நெருக்கமாக நடனமாடும் ஷாரிக்கை தன்னுடைய தம்பி என்று சொன்ன பின்பும் நெட்டிசன்கள் அனிதாவை சரமாரியாக கலாய்ப்பது மட்டுமல்லாமல், இதனால் அனிதாவின் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டு வருவதாகவும் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். 
 
இருப்பினும் இதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், அனிதா சம்பத் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்று வருகிறார். இதேபோல்தான் ஏற்கனவே அனிதா சம்பத்துக்கும் அவருடைய கணவருக்கும் விவாகரத்து ஏற்பட உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தது. 
 


இந்த செய்தியை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்ட அனிதா சம்பத் இதெல்லாம் உண்மை அல்ல என்று தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"சூடான ரொமான்ஸ்.. வரம்பு மீறி குத்தாட்டம்.." போடும் பிக்பாஸ் அனிதா - தீயாய் பரவும் வீடியோ..! "சூடான ரொமான்ஸ்.. வரம்பு மீறி குத்தாட்டம்.." போடும் பிக்பாஸ் அனிதா - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on August 24, 2021 Rating: 5
Powered by Blogger.