சீரியல், சினிமா, தொகுப்பாளினி, தயாரிப்பாளர் என பல அடையாளங்களைக் கொண்டுள்ள நடிகை நீலிமா ராணி, தற்போது சீரியல்களுக்கு சற்று இடைவெளி விட்டிருக்கிறார்.சினிமாவில் தற்போது முழு கவனத்தையும் செலுத்தியிருக்கும் அவர், தனது இசை பிக்சர்ஸ் மூலம் ‘சகோ’ என்ற மியூசிக் வீடியோவையும் தயாரித்துள்ளார்.
முன்பை விட புசு புசுவென உப்பிய கன்னங்களுடன் நிறைய படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார் நீலிமா.சென்னையில் பிறந்து வளர்ந்த நீலிமா, தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 15 வயதில் புரஃபஷனலாக தனது கரியரை தொடங்கினார்.
‘ஒரு பெண்ணின் கதை’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிய நீலிமாவுக்கு, அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின.’மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டு, மறுபுறம் திரைப்படங்களிலும் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
’நான் மகான் அல்ல’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நீலிமா.இவருடைய திறமையை நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும் இவர் தன்னுடைய மனதிற்கு சந்தோஷம் தரும் மாடலிங்கை விட்டுவிடுவதாக இல்லை.
அதனால் தான் இதற்கு முன்பு ஊர் ஊராக சுற்றி போட்டோஸ் எடுத்தவர்கள் தற்போது வீட்டு மொட்டை மாடியில் போட்டோஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.
இவர் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் தோன்றியிருந்தாலும் இப்ப வரைக்கும் இவர் நடித்த தேவர்மகன் , விரும்புகிறேன் ,பாண்டவர்பூமி என பல திரைப்படங்களிலும் இவருடைய குழந்தைப்பருவ நடிப்பு அழகாக இருக்கிறது.
Tags
Neelima Rani