விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து பட்டையை கிளப்பி இருந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மிர்ணாளினி ரவி.
டப்ஸ்மேஷ் செயலி மூலம் பிரபலமான இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்க இப்பொழுது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கிலும் படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவர் இப்பொழுது டைட்டான உடையில் இளசுகளின் நெஞ்சை பஞ்சர் ஆக்கியுள்ளார்.
படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை மிர்ணாளினி ரவி. விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து பட்டையை கிளப்பி இருந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியன் பெண்ணாக சிறப்பாக நடித்த இவருக்கு இப்போது கதாநாயகியாக வாய்ப்புகள் குவிகிறது.
தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.
ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.
அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.
தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "செம்ம ஸ்ட்ரக்ச்சர்" என்று வர்ணித்து வருகிறார்கள்.
0 கருத்துகள்