தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் நிறைய வந்துள்ளார்கள். ஆனால், அவர்கள் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நீடிக்க முடியும். இல்லாவிட்டால், கோலிவுட்டின் கமர்சியல் சூறாவளியில் சில படங்களிலேயே காணாமல் போக வேண்டியதுதான்.
அப்படி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி வாரிசு நடிகையாக சினிமாவுக்குள் வந்தாலும் தனது திறமையால் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஹீரோயின் நடிகை என்றால், வெறும் கவர்ச்சி, அசட்டுப் பெண்ணாக மட்டும் நடிக்காமல், ஹீரோயின், வில்லி என வரலட்சுமி கலவையாக ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.
போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி, விரைவிலேயே தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, மாரி 2 ஆகிய படங்களில் குறிப்பிடும் படியாக நடித்துள்ளார்.
அதே நேரத்தில் சர்க்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த வரலட்சுமியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து, சிறப்பாக எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வெளுத்து வாங்கும் வரலட்சுமிக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றனர்.
இதனால், வரலட்சுமி தென்னிந்திய சினிமாக்களில் நடிகையாக வலம் வருகிறார். நடிகை வரலட்சு சினிமா மட்டுமல்லாமல், விலங்குகள் பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகள் நலன், பெண்ணுரிமை என செயல்பாட்டாளராகவும் இருந்து வருகிறார்.
கதாநாயகியாக நன்றாக சென்றிருந்த நேரத்தில், திடீரென வில்லியாக மாறினார். சர்கார் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் வில்லியாக மிரட்டியிருப்பார். இதனையும் ரசிகர்கள் ரசித்தனர். தற்போது கன்னடத்தில் ரணம் எனும் படத்தில் நடித்துவருகிறார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் வீரக்குமார் இயக்கத்தில் சேஸிங் என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லர் அவதாரத்தில் இந்த படத்தில் நடித்து வருகிறார். தற்போது சேலையில் இதற்கு மேல் காட்ட முடியாது என்பதை போல கவர்ச்சியை வாரி வழங்கியிருக்கிறார்.
இதனைக்கண்ட ரசிகர்களுக்கு பல்ஸ் எகிற ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், தன்னுடைய முதல் படமான போடா போடி படத்தில் படு கவர்ச்சியான உடையில் தோன்றிய அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
0 கருத்துகள்