காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் படவாய்ப்புகள் குறையாமல் தீவிரமாக நடித்து வருகிறார்.
தற்போது அவர் கைவசம் 8 படங்கள் உள்ளன. காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், “திருமணத்துக்கு பிறகும் எனக்கு அதிக பட வாய்ப்புகள் வருகின்றன. இது மகிழ்ச்சியாக உள்ளது.
கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் திருமணத்துக்கு பிறகு ஓய்வு எடுத்து கணவருடன் சுற்ற முடியவில்லை. இது வருத்தமாக உள்ளது. சமீபத்தில் ஆடி மாதத்தில் கணவர் ஆரோக்கியமாக இருக்க பூஜைகள் செய்யும் பண்டிகையை கொண்டாடினேன்.
தற்போது தமிழில் ஹேய் சினாமிகா, கருங்காப்பியம், கோஷ்டி, தெலுங்கில் உமா ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டேன். சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும் நாகர்ஜுனா படங்களில் நடித்து வருகிறேன். நான் நடிப்பு தொழிலை நேசிக்கிறேன்.
அதை வேலை மாதிரி செய்யாமல் மகிழ்ச்சியாக செய்து வருகிறேன்'' என்றார். இந்நிலையில், டூ பீஸ் நீச்சல் உடையில் இளசுகளை கிறுகிறுக்க வைக்கும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், இருந்தாலும் தண்ணீர் இல்லாம போட்டோ எடுத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.