தமிழ் சினிமாவில் தற்பொழுது மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிக்கும் படங்கள் எல்லாவற்றிற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதோடு வசூல் சாதனை பெற்று வருவதும் தெரிந்ததே.
அந்த வகையில் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் தான் கர்ணன்.
மேலும் தேசிய விருது பெற்ற அசுரன் படத்திற்கு பிறகு தனுஷின் நடிப்பிற்கு தீனி போடும் திரைக்கதையை உருவாக்கி உள்ளார் என மாரி செல்வராஜுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கர்ணன் திரைப்படமும் தேசிய விருதை வெல்லும் என பலரும் கணித்துள்ளனர். அத்தோடு அதில் தனுஷின் நடிப்பைப் பலரும் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அத்தோடு முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு என படத்தைப் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளனர்.
அத்தோடு இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரஜிஷா விஜயன். இவர் தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் எனலாம். அந்தவகையில் இப்படத்தில் பாவாடை தாவணியில் நடித்து வந்த ரஜிஷா
தற்போது மீண்டும் புடவை கட்டி புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களே தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.
Tags
Rajisha Vijayan