கடற்கரையில் கவர்ச்சி உடையில் தங்கம் போல் மின்னும் அனுஷ்கா..! - வைரல் பிக்..!

 
2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இந்த படத்தில் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் கமிட்டானார்.
 
2006ம் ஆண்டு மாதவனுடன் ரெண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மொபைலா...மொபைலா.... பாடல் ஹிட் பாடலாக அமைந்து இவரை புகழின் உச்சத்தை தொட வைத்தது.
 
தமிழ்,தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவருக்கு திறமையை நிரூபிக்கும் திரைப்படமாக அமைந்தது அருந்ததி. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்தது. அதுவரை கவர்ச்சி நடிகையாக காணப்பட்ட அனுஷ்காவின் ரேஞ்சே அருந்ததி படத்திற்கு பிறகு மாறியது.
 
இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்தார். வரலாற்றுத் திரைப்படங்களிலும், சவால் நிறைந்த கதாபாத்திரங்களான ருத்ரமா தேவி, பாகுபலி போன்ற படங்களில் துணிச்சலுடன் நடித்து அதிலும் வெற்றிகண்டார். 


இப்படி, குடும்பப் பாங்கினியாக கலக்கிய அனுஷ்கா கவர்ச்சியிலும் கிறங்க வைத்தார். இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கடற்கரையில் கவர்ச்சி உடையில் தங்கம் போல் மின்னும் அனுஷ்கா..! - வைரல் பிக்..! கடற்கரையில் கவர்ச்சி உடையில் தங்கம் போல் மின்னும் அனுஷ்கா..! - வைரல் பிக்..! Reviewed by Tamizhakam on August 02, 2021 Rating: 5
Powered by Blogger.