"ப**க வர்றியான்னு கேக்குறாங்க..." - வெளிப்படையாக போட்டு உடைத்த நடிகை சோனா..!


தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் கவர்ச்சி, காமெடி, குணசித்திர வேடம் என ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை சோனா. இவர் தமிழில் குசேலன், கோ, குரு என் ஆள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக த்ரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு மற்றும் வரலட்சுமி நடித்த சேஸிங் ஆகிய படங்களில் நடித்திருந்தார். 
 
சினிமா மட்டுமல்லாமல் சோனா யுனிக் என்ற பேஷன் கடையும் வைத்திருக்கிறார். தற்போது இவர் சின்னத்திரையில் கால் பதிக்க முடிவு செய்துவிட்டார். அண்மையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்துள்ளாராம்.
 
இதுகுறித்து பேசிய சோனா, சினிமாதான் எனக்கு அடையாளம். நல்ல கதாப்பாத்திரம் அமைந்ததால் “அபி டெய்லர்ஸ்” சீரியலில் நடிக்கிறேன். தமிழ், மலையாளப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன்.
 
 
சமூக வலைதளங்களில் நடிகைகளை பற்றி மோசமாக கமெண்ட் அடிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்நிலையில் இது குறித்து நடிகை சோனா பேசியிருக்கிறார். 
 
அவர் கூறியதாவது, சமூக வலைதளங்களால் நிறைய பிரச்சனை வருகிறது. நான் உள்பட பல கலைஞர்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுகிறார்கள். அப்படி செய்யாதீர்கள் என்பது தான் என் வேண்டுகோள் என்றார்.ஒரு படத்தை பற்றி விமர்சிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. 


 
அதே போன்று நான் நடித்த ஒரு கதாபாத்திரமோ, இல்லை வேறு யாராவது நடித்த கதாபாத்திரம் பற்றியோ விமர்சிக்கவும் உரிமை உள்ளது. உச்ச கட்டமாக, படுக்க வர்றியானுலாம் கேட்கிறாங்க. இது போன்ற விமர்சனங்களை நிறுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். 
 
எல்லோர் வீட்டிலும் பொம்பளைங்க இருக்காங்க. அதனால் இது போன்று கமெண்ட்ஸ் எழுதும்போது கொஞ்சம் யோசித்தால் நன்றாக இருக்கும். இது வேண்டுகோள் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.
"ப**க வர்றியான்னு கேக்குறாங்க..." - வெளிப்படையாக போட்டு உடைத்த நடிகை சோனா..! "ப**க வர்றியான்னு கேக்குறாங்க..." - வெளிப்படையாக போட்டு உடைத்த நடிகை சோனா..! Reviewed by Tamizhakam on August 05, 2021 Rating: 5
Powered by Blogger.