பிகினி உடையில் கையில் மது பாட்டிலுடன்... - மாலத்தீவில் மலைக்க வைக்கும் சன்னிலியோன்..!

 
நடிகை சன்னி லியோனை தெரியாதவர்கள் இருக்க முடியாது என்றே கூறலாம். இணையதளத்தில் அதிகமாக தேடப்படும் நடிகையாக இவர் இருக்கிறார். ஆரம்பத்தில் அந்த மாதிரி படங்களில் நடித்த சன்னி லியோன், தற்போது அதிலிருந்து வெளியேறி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
 
2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். மேலும் ஒரு சில படங்களில் ஒரு சில பாடல்களில் மட்டும் நடித்து வருகிறார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சன்னி லியோனுக்கு எண்ணற்ற ரசிகர்கள் கூட்டம் உள்ளது. 
 
சமீபத்தில் 40 வயதை எட்டிய சன்னி லியோன் இப்போதும் இளமையாக இருக்கிறார். மேலும் இவர் மூன்று குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார். இப்போதும் இளமையாக இருப்பதற்கான ரகசியம் குறித்து சமீபத்தில் விளக்கிய சன்னி லியோன், உடற்பயிற்சி செய்வது, குறைவான கலோரி உணவுகளை சாப்பிடுவது என்கிறார். 
 
இதனிடையே நடிகர் சதீஷ், ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா நடிக்கும் ஒரு திகில் காமெடி திரைப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். 
 
இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை யுவன் இயக்குகிறார். ஜாவித் இசையமைக்கிறார். நகைச்சுவை-திகில் காட்சிகளின் கலவையாக இந்த திரைப்படம் தயாராகி வருகிறது.
 
 
நடிகைகள் எப்போதுமே அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்களை வெளியிடுவார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்கள். அப்படி சமூக வலைதள பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை சன்னி லியோன் ஏராளமான ரசிகர்கள் அவரை சமூக வலைத்தள பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். 
 

தற்போது இவரது சமூக வலைதள பக்கத்தில் பிகினி உடையில் மாலத்தீவில் கவர்ச்சி ஆட்டம் போடும் போட்டோ வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.